ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டி மழை காரணமாக சற்று தாமதமாக தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதன்காரணமாக ஆஸ்திரேலிய அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. 


அதன்பின்னர் ஜோடி சேர்ந்த லபுஸ்சென் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஜோடி நிதனமாக ஆடி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அப்போது ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சென் 44 ரன்கள் எடுத்திருந்தார். அந்த சமயத்தில் ஆட்டத்தின் 23ஆவது ஓவரை இங்கிலாந்து வீரர் பிராட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் மார்ன்ஸ் லபுஸ்சென் மிகவும் மோசமான முறையில் க்ளின் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். 


 






இது தொடர்பான வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவில், “கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் மோசமான ஆட்டமிழப்புகளில் இதுவும் ஒன்று” எனப் பதிவிட்டுள்ளது. மார்னஸ் லபுஸ்செனின் இந்த அவுட் தொடர்பாக பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 






 






 






 






 






 







இவ்வாறு பலரும் இந்த விக்கெட் தொடர்பாக தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சற்று முன்பு வரை ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 


மேலும் படிக்க: ஸ்டம்ப் மைக்கில் ஆவேசமாக பேசிய கோலி.. அதிரடியாக குவியும் கண்டனங்கள்..