கேப்டவுனில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கு அளிக்கப்பட்ட அவுட்டை டி.ஆர்.எஸ். மூலம் திரும்ப பெற்றதால் கடுப்பான கேப்டன் கோலி, ஸ்டம்பில் பொருத்திய மைக்கில் பேசியதற்கு முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கோலி மைக்கில் உங்கள் அணியிலும் கவனம் செலுத்துங்கள், எதிரணியினரை மட்டும் பிடிப்பதில் கவனம் செலுத்தாதீர்கள் என்று கூறினார்.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் விராட்கோலியின் செயலுக்கு, “நீங்கள் தொடரை வெல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது. ஏராளமான இளைஞர்கள் இந்த தொடரை பார்க்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும்” என்று கோலிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
ஆகாஷ்சோப்ரா தெரிவித்துள்ள கருத்தில், நடுவர்கள் புனிதமானவர்கள். அவர்கள் ஒன்றும் ரெப்ரி அல்ல. இந்த ஒரு விளையாட்டில்தான் நடுவர்கள் உள்ளனர். உங்கள் எதிர்ப்பைக் கூற உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால், அது சரியான முறையா? நிறைய குழந்தைகள் இந்த விளையாட்டைப் பார்க்கிறார்கள்.” என்று கூறியுள்ளார்.
கவுதம் கம்பீர் தெரிவித்துள்ள கருத்தில் கூறியிருப்பதாவது, ”இது உண்மையில் மிகவும் மோசமான செயல். இது உண்மையில் முதிர்ச்சியற்ற செயல். ராகுல் டிராவிட் அவருடன் பேசுவார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ராகுல்டிராவிட் ஒருபோதும் இதுபோன்று நடந்து கொள்ள மாட்டார்” என்று கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி 212 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி ஆடி வருகிறது. தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சில் 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தின்போது தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கு அஸ்வின் பந்தில் எல்.பி.டபுள்யூ கேட்கப்பட்டது. உடனே டீன் எல்கர் மூன்றாவது அம்பயரிடம் ரிவியூ கேட்டார். ரிவியூவில் அஸ்வின் வீசிய பந்து ஸ்டம்பில் இருந்து விலகிச் செல்வது போல காட்டியது. மேலும், டீன் எல்கர் நாட் அவுட் என்று அளிக்கப்பட்டது. இதனால், இந்திய வீரர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால், மிகவும் கடுப்பான இந்திய கேப்டன் விராட்கோலி ஸ்டம்பில் பொருத்தப்பட்டிருந்த மைக்கில் கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்