ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் தொடங்கிய இந்தத் தொடர், வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது.


அதிகரிக்கும் பார்வையாளர்கள்:


இந்த உலகக் கோப்பை தொடரை முன்பை விட அதிகமான பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர். அதன்படி, இதுவரை நடைபெற்ற 18 போட்டிகளை சுமார் 123.8 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது. இது கடந்த 2019ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை பார்வைகளை காட்டிலும் சுமார் 43% வளர்ச்சியாகும். அதேபோல், முதல் 18 போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு 364.2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை செய்துள்ளது. 


கிரிக்கெட் மோகத்தில் இந்தியா:


இந்திய ரசிகர்களின் கிரிக்கெட் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி, அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற்றது.


குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை தொலைக்காட்சி வாயிலாக, நேரலையாக சுமார் 76 மில்லியன் பார்வையாளர்களும், அதேபோல் டிஜிட்டலில் 35 மில்லியன் பார்வையாளர்களும் கண்டுகளித்துள்ளனர்.


43 மில்லியன் பார்வையாளர்கள்:


இமாச்சலப் பிரதேசம், தர்மசாலாவில் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது இந்திய அணி. இந்தப் போட்டியின் இறுதி ஓவர்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டும் சுமார் 43 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை பாகிஸ்தான் போட்டியின்போது இருந்த டிஜிட்டல் பார்வையாளர்களின் எண்ணிக்கையை முறியடித்து சாதனை படைத்தது. 


அதிகரிக்கும் ரசிகர்கள்:


அதேபோல், இதுவரையிலும் 5,42,000க்கும் அதிகமான ரசிகர்கள் இந்தப் போட்டிகளை நேரடியாக மைதானத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இது கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையின் பார்வையாளர்களை விட சுமார் 1,90,000 அதிகம்.


இந்நிலையில், இது தொடர்பாக ஐசிசி தலைமை நிர்வாகி ஜியோஃப் அலார்டிஸ் கூறுகையில், “ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நம்பமுடியாத பார்வையாளர்கள் 2023  கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆர்வமுடன் இருப்பதை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.


உலகக் கோப்பை தொடர் இந்தியா முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்துள்ளது. மில்லியன் கணக்கான ரசிகர்கள் இந்தப் போட்டிகளை ரசிக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.


இது தொடர்பாக பேசிய டிஸ்னி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தலைவர் சஞ்சோக் குப்தா, “பார்வையாளர்களை ஒருங்கிணைக்கும் திறனை நாங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறோம்.  ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் புதிய பார்வையாளர்களுக்கான அளவுகோல்களை அமைத்துள்ளது. இந்திய அணியின் வலுவான ஆட்டத்தினால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 


டிஸ்னி ஹாட்ஸ்டார் விளையாட்டு ரசிகர்களுக்கான சேவையைத் தொடர்ந்து செய்யும். அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.  இதன் மூலம் உலக அளவில் உள்ள விளையாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: MS Dhoni: 'அந்த ஒரு தோல்வி.. மனதளவில் அன்றே ஓய்வு பெற்றுவிட்டேன்' தோனி உணர்ச்சிவசப்பட்ட தருணம்!


மேலும் படிக்க: ODI World Cup 2023 Marco Jansen : உலகக் கோப்பை தொடர்... விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 2 விக்கெட்...மார்கோ ஜான்சன் சாதனை!