கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன்.
முதல் போட்டி:
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், இலங்கை அணியை எதிர்கொண்டது தென்னாப்பிரிக்கா. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் மொத்தம் 10 ஓவர்கள் வீசிய மார்கோ ஜான்சன் 92 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரண்டாவது போட்டி:
ஆஸ்திரேலிய அணியை கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி எதிர்கொண்டது தென்னாப்பிரிக்க அணி. இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் 7 ஓவர்கள் வீசிய மார்கோ ஜான்சன் 54 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மூன்றாவது போட்டி:
கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர் கொண்டது தென்னாப்பிரிக்க அணி. இந்த போட்டியில், நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக, இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 8 ஓவர்கள் வீசினார்.
அதில் 1 ஓவர் மெய்டன் செய்து 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மழை காரணமாக இந்த போட்டியில் 43 ஓவர்கள் மட்டுமே ஆட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நான்காவது போட்டி:
கடந்த முறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து அணியுடன் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி விளையாடியது தென்னாப்பிரிக்க அணி. இந்த போட்டியில் 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இதில், மார்கோ ஜான்சன் மொத்தம் 5 ஓவர்கள் வீசினார். 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐந்தாவது போட்டி:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்று வரும் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது தென்னாப்பிரிக்க அணி.
அதன்படி, இன்றைய போட்டியில் இதுவரை 6 ஓவர்கள் வீசியுள்ள நிலையில், 1 ஓவர் மெய்டன் செய்து 25 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இப்படி இந்த உலகக் கோப்பை தொடரில் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் மார்கோ ஜான்சன்.
மேலும் படிக்க: 2007 முதல் தொடரும் சோகம்; 15 ஆண்டுகளாக இலங்கையிடம் தோற்கும் இங்கிலாந்து - இதுவரை நடந்தது என்ன?
மேலும் படிக்க: PAK Vs SA LIVE Score: பாகிஸ்தானின் ஆஸ்தான வீரர்களை தட்டித் தூக்கிய தென்னாப்பிரிக்கா; வேகத்திடம் தாக்கு பிடிப்பார்களா டைல் எண்டர்ஸ்?