ICC World Cup 2023: PAK vs SA : உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் தற்போது மிகவும் சுவராஸ்யமான இடத்துக்கு வந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒருசில அணிகள் மிகவும் மோசமான ஆட்டத்தினால் புள்ளிப்பட்டியலில் அதளபாதாளத்தில் உள்ளது. குறிப்பாக நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் மிகவும் பெரிய அணியாக கருதப்படும் பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்த தோல்விகளால் கிரிக்கெட் ரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது மட்டும் இல்லாமல், தங்களது சொந்த நாட்டு ரசிகர்களுக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதிக்கொண்டது. பாகிஸ்தான் அணி தனக்கு மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் தகுதியைப் பெறும். இப்படியான நிலையில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி டாஸ் வென்ற் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையாவில்லை. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான அப்துல்லா மற்றும் இமாம் ஆகியோரது விக்கெட்டினை பவர்ப்ளேவிற்குள் தென்னாப்பிரிக்காவின் மார்கோ யான்சென் கைப்பற்றினார்.
அதன் பின்னர் இணைந்த கேப்டன் பாபர் அஸாம் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டு வலுவான நிலைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடுவதாக அவசரப்பட்டு ஷாட்களை ஆடிவந்த ரிஸ்வான் தனது விக்கெட்டினை கோட்ஸீ பந்தில் இழந்தார். அதன் பின்னர் வந்த இஃப்திகாரும் அதே ட்ம்ளேட்டில் தனது விக்கெட்டினை ஷாம்ஷி பந்தில் வெளியேறினார். இதற்கிடையில் அணியினை வலுவான நிலைக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் அணியின் கேட்பன் பாபர் அசாம் தனிநபராக போராடிக் கொண்டு இருந்தார். ஆனால் அவரும் 50 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை ஷ்கூப் ஷாட் ஆட முயற்சி செய்து தனது விக்கெட்டினை ஷாம்ஷி பந்தில் இழந்து வெளியேறினார்.
பாபர் அசாம் தனது விக்கெட்டினை இழந்தபோது பாகிஸ்தான் அணி 27.5 ஓவர்களில் 5 விக்கெட்டினை இழந்து 141 ரன்கள் சேர்த்திருந்தது. அவ்வளவுதான் பாகிஸ்தான் அணி 200 ரன்கள் எடுக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் இக்கட்டான சூழலில் கைகோர்த்த ஷவுத் ஷகில் மற்றும் ஷதாப் கான் கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது. இவர்களில் கூட்டணியை தென்னாப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றும் உடனே பிரிக்க முடியவில்லை. இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் இணைந்து இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முதல் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். இதையடுத்து இருவரும் 50 ரன்களை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தனர். இதில் ஷதாப் கான் 43 ரன்களிலும் ஷவுத் ஷகில் 52 ரன்களிலும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 10 விக்கெட்டினை இழந்து 270 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷவுத் ஷகில் 52 ரன்களும், பாபர் அசாம் 50 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஷம்ஷி 4 விக்கெட்டுகளும் மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளும் கோட்ஸீ 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.