வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று டிரினிடாட்டில் கடைசி ஒருநாள் போட்டியில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ்குமார், இஷான்கிஷான் உள்பட பலருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.


இந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளராக அனுபவ பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் களமிறங்கியுள்ளார். இந்திய அணிக்காக கடைசியாக 2013ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஜெய்தேவ் உனத்கட், 3540 நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்காக மீண்டும் ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளார்.  


இந்திய அணிக்காக சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய ஜெய்தேவ் உனத்கட்தான் இரண்டு ஒருநாள் போட்டிகள் விளையாட அதிக இடைவெளி எடுத்துக்கொண்ட வீரரா? என்று ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் நிச்சயம் இல்லை என்பதே அதற்கான பதில். ஏனென்றால், இரண்டு ஒருநாள் போட்டிகள் விளையாட அதிக இடைவெளி எடுத்துக்கொண்ட வீரர்கள் பட்டியலில் ஜெய்தேவ் உனத்கட் 8வது இடத்திலே உள்ளார். அவருக்கு முன்பு அந்த இடத்தில் 7 வீரர்கள் உள்ளனர்


ஒருநாள் போட்டியில் இரண்டு போட்டிகளுக்கு இடையே அதிக இடைவெளி கொண்ட 10 வீரர்கள்:



  1. ஜெப் வில்சன்


நியூசிலாந்து வீரர் ஜெப் வில்சன் 1993ம் ஆண்டு மார்ச் 28க்கு பிறகு சுமார் 11 ஆண்டுகள் 331 நாட்களுக்கு பிறகு 2005ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி களமிறங்கினார்.



  1. கம்மின்ஸ்:


கனடா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்காக ஆடியுள்ள இவர் 1995ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதிக்கு பிறகு 2007ம் ஆண்டு ஜனவரி 18-ந் தேதி அதாவது 11 ஆண்டுகள் 30 நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் களமிறங்கினார்.



  1. ஷாவ்ன் உடால்:


1995ம் ஆண்டு மே 28-ந் தேதி இங்கிலாந்து அணிக்காக களமிறங்கிய ஷாவ்ன் உடால் 2005ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி 10 ஆண்டுகள் 207 நாட்களுக்கு பிறகு களமிறங்கினார்.



  1. ப்ளாயிட் ஃரைபர்:


வெஸ்ட் இண்டீசைச் சேர்ந்த ப்ளாயிட் ஃரைபர் 1999ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதிக்கு பிறகு 10 ஆண்டுகள் 169 நாட்களுக்கு பிறகு 2009ம் ஆண்டு 26 ஜூலையில் களமிறங்கினார்.



  1. ஷேவியர் மார்ஷல்:


அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடியுள்ள ஷேவியர் மார்ஷல் 2009ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதிக்கு பிறகு 10 ஆண்டுகள் 110 நாட்கள் இடைவெளியில் 2019ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி களமிறங்கினார்.



  1. நிகில் தத்தா:


கனடாவைச் சேர்ந்த நிகில் தத்தா 2013ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதிக்கு பிறகு 10 ஆண்டுகள் 16 நாட்களுக்கு பிறகு 2023ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி ஆடினார்.



  1. வெய்ன் லார்கின்ஸ்:


இங்கிலாந்தைச் சேர்ந்த வெய்ன் 1980ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதிக்கு பிறகு 1989ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி களமிறங்கினார். இதற்கு இடைப்பட்ட நாட்கள் 9 ஆண்டுகள் 251 நாட்கள் ஆகும்.



  1. ஜெய்தேவ் உனத்கட்:


இந்திய வீரர் ஜெய்தேவ் உனத்கட் 2013ம் ஆண்டு நவம்பர் 21-ந் தேதிக்கு பிறகு 9 ஆண்டுகள் 251 நாட்கள் இடைவெளியில் இன்று களமிறங்கியுள்ளார்.



  1. ஜோ டென்லி:


இங்கிலாந்து வீரர் ஜோ டென்லி 2009ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி 9 ஆண்டுகள் 213 நாட்களுக்கு பிறகு 2019ம் ஆண்டு மே 3-ந் தேதி களமிறங்கினார்.



  1. செபாஸ் ஜூவாவ்:


ஜிம்பாப்வே வீரர் செபாஸ் ஜூவாவோ 2008ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதிக்கு பிறகு 9 ஆண்டுகள் 140 நாட்களுக்கு பிறகு 2018ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.