கடந்த பத்தாண்டுகளாக மார்டன் டே கிரிக்கெட்டில் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களில் உடற்தகுதியுடன் இருக்கவே விரும்புகிறது. ஆனால், இதற்கெல்லாம் அப்பாற்பட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் ரஹ்கீம் கார்ன்வால் இருக்கிறது. உலக கிரிக்கெட்டில் அதிக எடை கொண்ட வீரராக பார்க்கப்படும் கார்ன்வாலின் எடை சுமார் 143 கிலோ என்று கூறப்படுகிறது. 


இருப்பினும், இவரது உடல் எடையை மட்டும் மறுத்துவிட்டு கிரிக்கெட்டில் செயல்திறனை எடுத்துகொண்டால் சிறப்பானதாகவே இருக்கும். ஆப் ஸ்பின்னரான இவர், பேட்டிங்கிலும் அதிரடிக்கு பெயர் போனவர். சமீபத்தில், இந்தியாவிற்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின்போது கூட கார்ன்வால், டெஸ்ட்டில் சூப்பராக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 


இந்தநிலையில், கரீபியன் பிரீமியர் லீக் சீசனில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்காக ரஹ்கீம் கார்ன்வால் விளையாடி வருகிறார். ஆகஸ்ட் 17 அன்று, செயின்ட் லூசியா கிங்ஸுக்கு எதிரான போட்டியில், 202 ரன்கள் இலக்கைத் துரத்த அவரது அணி இறங்கியபோது, ​​இன்னிங்ஸின் முதல் பந்திலேயே வித்தியாசமான முறையில் ரஹ்கிம் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். ரஹ்கீமின் ரன் அவுட்டை பார்த்து மைதானத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






ரஹ்கீம் கார்ன்வால் மேத்யூ ஃபோர்டின் பந்தை லெக் சைடில் அடிக்க முயற்சித்தார். அப்போது, பீல்டிங் செய்து கொண்டிருந்த கிறிஸ் சோலால் வேகமாக ஓடி வந்துகொண்டிருந்த பந்தை தவறவிட்டார். இதைபார்த்த கார்ன்வாலு மறுமுனைக்கு 1 ரன் எடுக்க ஓட, சோல் விரைவில் பந்தைப் பிடித்து ஸ்டம்பை நோக்கி வீசினார். 


அப்போது, மறுமுனையில் உள்ள கிரீஸுக்கு எல்லை போவதற்குள், பந்தனாது ஸ்டம்பில் பட்டு தெரித்தது. இதன்மூலம், கார்ன்வால் ரன் ஏதுவுமின்றி வெளியேறினார். அங்கிருந்த வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் கார்ன்வாலை பார்த்து கேலி செய்தனர். 


கடந்த சீசனில் கார்ன்வால் அடித்த பிரமாண்ட சிக்ஸர்:






54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பார்படாஸ் அணி:


இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிறு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் ஷான் வில்லியம்ஸ் 47 ரன்களும், கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்சிஸ் 46 ரன்களும் எடுத்தனர். இலக்கை துரத்திய பார்படாஸ் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 147 ரன்களுக்கு மட்டுமே சுருண்டது. செயின்ட் லூசியா அணியில் இருந்து மேத்யூ ஃபோர்ட் 3 விக்கெட்களும், அனைத்து வீரர்களும் தலா 1 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர்.