நேற்று மதியம் 2023 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, சிறிய குழப்பதால் சமூக ஊடகங்களில் ஒரு புரட்சியே வெடித்தது. இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஹித் அகர்கர் 17 வீரர்களின் பெயர்களை அறிவித்தபோது, அதில் தொடக்க வீரர் சுப்மன் கில் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், ஆசிய கோப்பையின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ், கில் இந்திய அணியில் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. 


இதையடுத்து, சுப்மன் கில் அணியில் சேர்க்கப்படவில்லை என்று ஒளிபரப்பாளரால் கூறப்பட்ட  உடனேயே, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். ஆனால், சரியாக 9 நிமிடங்களுக்கு பிறகு, அகர்கர் அணியை அறிவித்தபோது அதில் கில்லின் பெயர் இடம்பெற்றது. 






இதன் தொடர்ச்சியாக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பாளர் சார்பில் தங்களது தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. இதுகுறித்து, தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் கூறுகையில், “கில் அணியில் இருக்கிறார். அதில், எந்த மாற்று கருத்தும் இல்லை. அதேபோல், சஞ்சு சாம்சன் ஒரு பேக்அப் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். 


இந்தநிலையில், கடந்த 2 ஆண்டுகளாக சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் எவ்வாறு செயல்பட்டார் என்ற புள்ளி விவரங்களை கீழே காணலாம்.


கடந்த 2 ஆண்டுகளாக ஒருநால் போட்டியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார் சுப்மன் கில். கடந்த 1 வருடத்தில், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்களை விட ஷுப்மான் கில் அதிக ரன்கள் எடுத்துள்ளார். சுப்மன் கில் 2022 ஆம் ஆண்டில் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். இந்த 12 ஒருநாள் போட்டிகளில் சுப்மான் கில் 638 ரன்கள் எடுத்தார். இதன் போது, ​​சுப்மன் கில்லின் சராசரி 70.9 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 102.6 ஆகவும் இருந்தது. அதே சமயம் சுப்மன் கில் 3 சதங்களும், 5 அரைசதங்களும் அடங்கும். 


இந்தாண்டில் சுப்மன் கில் எப்படி..?


2023 ம் ஆண்டியில் சுப்மன் கில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 750 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சராசரி 68.2 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 109 ஆகவும் இருந்துள்ளது. 


சும்பன் கில் இதுவரை 27 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1437 ரன்கள் எடுத்துள்ளார். இதில், சுப்மன் கில்லின் சராசரி 62.5 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 104.1 ஆகவும் உள்ளது. ஷுப்மான் கில் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 4 சதங்கள், 6 அரை சதங்கள் அடித்துள்ளார். 


ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்த வீரர் சுப்மன் கில்:


ஐபிஎல் 2023 சீசனில் சுப்மன் கில் பட்டையை கிளப்பினார். இந்த சீசனில் இவர் 17 போட்டிகளில் 890 ரன்கள் குவித்துள்ளார். இதில், கில்லின் சராசரி சராசரி 59.3 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 157.8 ஆகவும் இருந்தது. 


மேலும், ஐபிஎல் 2023 சீசனில் 3 சதங்கள், 4 அரை சதங்கள் அடித்து அசத்தினார். ஐபிஎல் 2023 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதற்கு சுப்மன் கில் ஒரு முக்கிய காரணம். இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி சாம்பியனானது.