2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு நேற்றைய இரண்டாம் நாள் சிறப்பானதாக அமைந்தது. நேற்றைய நாளில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் மீராபாய் சானு மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தார். மேலும், ஆண்களுக்கான 55 கிலோ பிரிவில் சங்கேத் சர்கார் வெள்ளியும், ஆடவருக்கான 61 கிலோ எடைப் பிரிவில் குருராஜா பூஜாரி வெண்கலமும் வென்றனர்.


குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், ஏரைன் நிக்கல்சனுக்கு எதிராக ஏகமனதாக முடிவெடுத்து 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்திய டேபிள் டென்னிஸ் மலேசியாவிடம் மோதிய போதிலும், மகளிர் ஹாக்கி அணி வேல்ஸை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி வலுவான நிலைக்கு சென்றது. 


அதேபோல், மகளிர் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி பிந்த்யாராணி தேவி வெள்ளி பதக்கம் வென்றார். 


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 3 ம் நாள் இந்தியர்கள் இடம்பெறும் நிகழ்வுகளின் முழுப் பட்டியல் இங்கே:  



நேரம்: தடகள வீரர் - (விளையாட்டு)



  • பிற்பகல் 1:00: தானியா சௌத்ரி vs ஷௌனா ஓ நீல் (வடக்கு தீவு) (லவுன் பால்ஸ்)

  • பிற்பகல் 1:30: யோகேஷ்வர் சிங் - ஆண்கள் ஆல்ரவுண்ட் பைனல் (ஜிம்னாஸ்டிக்ஸ்)

  • பிற்பகல் 2:00: ஜெர்மி லால்ரின்னுங்கா - ஆண்கள் 67 கிலோ (பளு தூக்குதல்)

  • பிற்பகல் 2:00: ஆண்கள் அணி காலிறுதி (டேபிள் டென்னிஸ்)

  • பிற்பகல் 2:00: ஆண்கள் அணி காலிறுதி (டேபிள் டென்னிஸ்)

  • பிற்பகல் 2:32: ஈசோ அல்பென், ரொனால்டோ லைடோன்ஜாம், டேவிட் பெக்காம் - ஆண்கள் ஸ்பிரிண்ட் தகுதிச் சுற்று (சைக்கிளிங்)

  • பிற்பகல் 3:07: சஜன் பிரகாஷ் – ஆண்களுக்கான 200மீ பட்டர்பிளை ஹீட் 3 (நீச்சல்)

  • பிற்பகல் 3:27: ஆண்கள் ஸ்பிரிண்ட் 1/8 இறுதிப் போட்டிகள் (தகுதி இருந்தால்) (சைக்கிளிங்)

  • பிற்பகல் 3:30: இந்தியா vs பாகிஸ்தான் (கிரிக்கெட்)

  • பிற்பகல் 3:31: ஸ்ரீஹரி நடராஜ் – ஆண்களுக்கான 50மீ பேக்ஸ்ட்ரோக் ஹீட் 6 (நீச்சல்)

  • மாலை 4:00 : இந்தியா vs இங்கிலாந்து - லான் பவுல் ஆண்கள் ஜோடி

  • மாலை 4:04 : ஆண்கள் ஸ்பிரிண்ட் காலிறுதி (தகுதி இருந்தால்) (சைக்கிளிங்)

  • மாலை 4:20/4:59 : வெங்கப்பா கெங்கலகுட்டி, தினேஷ் குமார் - ஆண்களுக்கான 15 கிமீ ஸ்கிராட்ச் ரேஸ் தகுதிச் சுற்று (சைக்கிளிங்)

  • மாலை 4:45 : நிகாத் ஜரீன் vs ஹெலினா இஸ்மாயில் பாகூ (MOZ) – 48 – 50KGக்கு மேல் (16வது சுற்று) (குத்துச்சண்டை)

  • மாலை 5:15: ஷிவா தாபா vs ரீஸ் லிஞ்ச் (SCO) - 60 - 63.5KGக்கு மேல் (ரவுண்ட் ஆஃப் 16)

  • மாலை 6:00: ஜோஷ்னா சின்னப்பா vs கைட்லின் வாட்ஸ் (NZL) - பெண்கள் ஒற்றையர் சுற்று 16 (ஸ்குவாஷ்)

  • மாலை 6:30: பாபி ஹசாரிகா - பெண்கள் 59KG (பளு தூக்குதல்)

  • மாலை 6:45 : சவுரவ் கோசல் vs டேவிட் பெய்லர்ஜியன் (CAN) - 16 ஆண்கள் ஒற்றையர் சுற்று (ஸ்குவாஷ்)

  • இரவு 7:00 : பெண்கள் ஆல்ரவுண்ட் பைனல்

  • இரவு 7:30 : பெண்களுக்கான நான்கு காலிறுதிப் போட்டிகள் (லான் பால்ஸ்)







  • இரவு 7:40 : ஆண்கள் ஸ்பிரிண்ட் அரையிறுதி (தகுதி பெற்றால்) (சைக்கிளிங்)

  • இரவு 8:30: இந்தியா vs கானா - ஆண்கள் பூல் ஏ (ஹாக்கி)

  • இரவு 9:02 : த்ரியாஷா பால், மயூரி லூட் - பெண்களுக்கான 500M டைம் ட்ரையல் பைனல் (சைக்கிளிங்)

  • இரவு 10:00 மணி முதல்: கலப்பு அணி காலிறுதி (பேட்மிண்டன்)

  • இரவு 10:12 : ஆண்கள் ஸ்பிரிண்ட் இறுதிப் போட்டிகள் (தகுதி இருந்தால்) (சைக்கிளிங்)

  • இரவு 10:30 : ஆண்கள் ஜோடி காலிறுதி (தகுதி இருந்தால்) (லான் பால்ஸ்)

  • இரவு 10:30 : பெண்கள் ஒற்றையர் காலிறுதி (தகுதி இருந்தால்) (லான் பால்ஸ்)

  • இரவு 11:00: அச்சிந்தா ஷூலி - ஆண்கள் 73 கிலோ (பளு தூக்குதல்)

  • இரவு 11:12 : ஆண்களுக்கான 15KM ஸ்கிராட்ச் ரேஸ் இறுதிப் போட்டி (தகுதி இருந்தால்) (சைக்கிளிங்)

  • பிற்பகல் 11:37: ஸ்ரீஹரி நடராஜ் – ஆண்களுக்கான 50மீ பேக்ஸ்ட்ரோக் அரையிறுதி (நீச்சல்)

  • இரவு 11:58 : சஜன் பிரகாஷ் – ஆண்களுக்கான 200 மீ பட்டர்பிளை பைனல் (நீச்சல்)

  • இரவு 12:15  (AUG 1): சுமித் vs Callum Peters (AUS) – 71 – 75KGக்கு மேல் (ரவுண்ட் ஆஃப் 16)

  • இரவு 1:00  (AUG 1): Sagar vs Maxime Yegnong Njieyo (கேமரூன்) - 92KGக்கு மேல்

  • இரவு  1:30 AM (AUG 1): பெண்கள் அணி அரையிறுதி (டேபிள் டென்னிஸ்)


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண