வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது போட்டியில் 7000 டெஸ்ட் ரன்களை கடந்து புஜாரா சாதனை படைத்துள்ளார்.
7000 ரன்கள்:
வங்காளதேசத்தின் மிர்பூரில் உள்ள ஷெர்-இ-பங்களா ஸ்டேடியத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டின் முதல் நாளான நேற்று இந்திய அணி வங்காளதேசத்தை வெறும் 227 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுலுடன் மீண்டும் இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்க, இந்திய அணி மிகப்பெரிய முதல் இன்னிங்ஸ் முன்னிலையை பெறும்முனைப்பில் ஆடியது.
தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கோலியும் புஜாராவும் நிதானமாக ஆடினர். இந்த போட்டியில் புஜாரா 16 ரன்கள் எடுத்தபோது டான் பிராட்மேனின் 6996 ரன்களை கடந்து சென்று சாதனை படைத்தார். 19 ரன்கள் எடுத்தபோது 7000 ரன்களை கடந்து சென்று சாதனை படைத்தார். இதன் மூலம் 7000 ரன்களை கடந்த 8வது இந்திய வீரர் என்னும் சாதனையை படைத்தார். அவர் 55 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, விராட் கோலியும் அவரைத் தொடர்ந்து ஆட்டமிழந்தார்.
முதல் டெஸ்ட்
2 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதற்கு இந்திய அணிக்கு தேவையான புள்ளிகளை அளித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 272/6 என்ற ஸ்கோரை தொடர்ந்து கடைசி இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி 5 வது நாளில் 324 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
விராட் கே.எல்.ராகுல்
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் ஷுப்மான் கில், சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் ஜாகிர் ஹசன் ஆகியோர் சதமடித்தனர். முதல் ஆட்டத்தில் இந்தியாவின் செயல்திறன் திருப்திகரமாக இருந்தாலும், அந்த போட்டியில் சரியாக ஆடாத கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய இரண்டு முக்கிய வீரர்கள் பற்றி ரசிகர்கள் கவலைகொள்கின்றனர். இந்த டெஸ்டிலும் முதல் இன்னிங்சில் இருவரும் சொற்ப ரன்களுக்குள் ஆட்டமிழந்த நிலையில் அவர்கள் ஃபார்ம் குறித்த கவலை அதிகரித்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
முதல் வெற்றியோடு இன்னொருமுறை வென்றுவிட்டால் WTC தரவரிசையில் இந்தியாவை இன்னும் சிறந்த நிலைக்கு கொண்டு வருவது மட்டுமின்றி இறுதிப் போட்டிக்கு வருவதற்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா ஏற்கனவே இரண்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் உள்ள ஷேரே பங்களா தேசிய மைதானத்தில் டிசம்பர் 22 முதல் டிசம்பர் 26 வரை நடைபெறுகிறது. தோல்வியில் இருந்து மீண்டு 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய பங்களதேஷ் அணி முயற்சிக்கும்.