சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்  வெளியாகியுள்ளது. 


சாம்பியன்ஸ் டிராபி 2025: 


பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் இந்திய கிரிக்கெட் அணி தனது கவனத்தை வைத்துள்ளது. CT 2025 இல் இந்திய அணி  பிப்ரவரி 23 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான  மோத உள்ளது.


இந்தியாவின் அதிகாரப்பூர்வ அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான வலுவான இந்திய அணியை தயார் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.


ரோகித் சர்மா:


மூத்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 50 ஓவர் போட்டிகளில் இந்திய கேப்டனாக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியானது. மேலும் இந்தியாவை மற்றொரு ஐசிசி பட்டத்திற்கு இட்டுச் செல்லும் நோக்கத்துடன். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஜஸ்பிரித் பும்ரா இந்த போட்டிக்கான துணை கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மீண்டும் ஷமி: 


உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி தனது உடற்தகுதியை நிரூபித்த மூத்த வீரர் முகமது ஷமி மீண்டும்  அணிக்கு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோரைக் கொண்ட பந்துவீச்சு வரிசையை ஷமி பலப்படுத்துவார், இது அனுபவம் மற்றும் இளைஞர்களின்  கலவையை கொண்ட பவுலிங் அட்டாக்காக இது இருக்கும் என்றுஉருவாக்குகிறது.


இதையும் படிங்க: Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா


தற்போது வந்துள்ள தகவலின்படி, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஜனவரி 12 ஆம் தேதிக்குள் தங்கள்  அணிகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பிப்ரவரி 13 வரை மாற்றங்கள் அனுமதிக்கப்படும். 


2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான சாத்தியமான இந்திய அணி


டாப் ஆர்டர்: ரோஹித் சர்மா (சி), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி


மிடில் ஆர்டர்: ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல்


விக்கெட் கீப்பர்-பேட்டர்ஸ்: ரிஷப் பந்த், கேஎல் ராகுல்


ஆல்-ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி / அக்சர் படேல்


பந்துவீச்சாளர்கள்: ஜஸ்பிரிட் பும்ரா (விசி), முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்