Champions Trophy 2025 : 37 வருட இந்தியாவின் சாபம்! இந்த முறையாவது நீங்குமா? ரசிகர்களின் கனவை நிறைவேற்றுவாரா ரோகித்

Champions Trophy 2025 : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வருகிற 9ஆம் தேதி துபாயில் மோதவுள்ளது.

Continues below advertisement

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் 37 வருட ஏக்கத்தை நிறைவேற்ற இந்திய அணியின் அருமையான வாய்ப்பு தற்போது அமைந்துள்ளது. 

Continues below advertisement

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வருகிற 9ஆம் தேதி துபாயில் மோதவுள்ளது. சம பலத்துடன் இருக்கும் இரு அணிகள் மோதவுள்ள இந்த போட்டியை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 

37 ஆண்டுக்கால சாபம்:

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஐ.சி.சி போட்டி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தியது இல்லை. கடைசியாக 1988 ஆம் ஆண்டு ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. அதன் பின்னர், இந்தியா அணி நியூசிலாந்து அணியை சந்தித்த பெரிய தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. 

2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதை யாராலையும்  மறக்க முடியாது, அந்த போட்டியில் எம்.எஸ். தோனி கண்ணீர் மல்க வெளியேறியது, இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது, ஆனால் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில்  வெறும் ஒரு போட்டியை விட கடந்த கால தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் போட்டியாக உள்ளது. 

இதையும் படிங்க: IND vs NZ: 25 வருட வலி! இந்தியாவை கதறவிடும் நியூசிலாந்து.. நேருக்கு நேர் எப்படி?

இறுதிப்போட்டியில் தொடரும் தோல்வி:

ஐ.சி.சி போட்டி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை வென்றதில்லை. இரண்டு பெரிய தோல்விகளின் வேதனையான நினைவுகள் இன்னும் இந்திய ரசிகர்களை வேட்டையாடுகின்றன:

2000 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தது. 2021 ஆம் ஆண்டில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சனின் தலைமையிலான நியூசிலாந்து அணி மீண்டும் இந்தியாவை வீழ்த்தியது.

நியூசிலாந்து அணி தனது வரலாற்றில் இரண்டு ஐ.சி.சி கோப்பைகளை மட்டுமே வென்றுள்ளது, இரண்டு சந்தர்ப்பங்களிலும், இந்தியாவை வீழ்த்தி தான் கோப்பையை வென்றிருந்தது. 

இதையும் படிங்க: Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?

ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி வைப்பாரா?

கடைசியாக இந்தியா  நியூசிலாந்தை இறுதிப் போட்டியில் வீழ்த்தியது 1988 ஆம் ஆண்டு, ரவி சாஸ்திரி தலைமையில் ஷார்ஜா கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு, நியூசிலாந்து அணி  இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

2000 ஆம் ஆண்டில், நியூசிலாந்து இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

2005 ஆம் ஆண்டு, முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில்  இந்தியாவை வீழ்த்தியது.

2021 ஆம் ஆண்டு, WTC இறுதிப் போட்டியில் இந்திய அணியை வென்றிருந்தது.

ரோஹித் சர்மாவுக்கு இந்த மோசமான சாபத்தை மாற்ற ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை ரோகித் சர்மா பாய்ஸ் நிறைவேற்றுவார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola