இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடர்பான விஷயம் என்றால் அது எப்போதும் சமூக வலைதளங்களில் வைரல் தான். அதிலும் குறிப்பாக அவர் செய்த செயல் தொடர்பாக ஒரு பதிவு என்றால் அது நிச்சயம் வைரலாகிவிடும்.
தோனியின் தலைமையின்கீழ் அறிமுகமான இந்திய அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், தனது யூடியூப் சேனலான "DRS with Ash" என்ற சேனலில் தனது வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அதேபோல், அனைத்து நாட்டு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்களின் அனுபவங்களையும் கேட்டு அந்த யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்றொரு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுடன் உரையாடினார். அதில், சாஹல் தனது கிரிக்கெட் வாழ்க்கை, பெங்களூர் அணியின் விளையாடியது, பெங்களூர் அணியில் இருந்து எப்படி இந்திய அணிக்கு தேர்வானேன் என்பது போன்ற பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்பொழுது, திடீரென அஷ்வின் சாஹல் பேசும்போது குறிப்பிட்டு கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், எப்பொழுதும் பந்து வீச்சாளர்களுக்கும், பின்னால் நிற்கும் விக்கெட் கீப்பருக்கு நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். அப்படி உங்களுக்கும் முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு இடையிலான பிணைப்பு எத்தகையது என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த சாஹல், நானும் சரி, குல்தீப் யாதவும் சரி தோனியை முழுதாக நம்பினோம். அந்த வகையில் தோனி எங்களுக்கு நிறைய உதவினார். பந்து வீசும்போது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நினைத்தது இல்லை. ஒரு சமயம் சௌத் ஆப்பிரிக்கா அணியை சார்ந்த கிளாசென் நான் போட்ட பந்துகளை எல்லாம் மைதானத்திற்கு வெளியே தூக்கி அடித்தார். அன்று நான் சௌத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டி 20 போட்டியில் 64 ரன்களை விட்டுகொடுத்தேன். குறிபிட்ட ஓவர் போட்டிகளில் அதிக ரன் கொடுத்த வீரர் என்ற என்ற மோசமான சாதனையும் அன்று எனக்கு கிடைத்தது. திடீரென என்னை பார்த்து தோனி ஓடிவந்தார்.
அப்பொழுது, நான் இப்ப என்ன செய்ய வேண்டும் மஹி பாய் என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்,ஒண்ணுமில்ல, உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். இது உங்கள் நாள் அல்ல, நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் ஆனால் அது நடக்கவில்லை என்று எனக்குத் தெரியும். அதிகம் யோசிக்க வேண்டாம், உங்கள் நான்கு ஓவர்களை முடித்துவிட்டு நிதானமாக இருங்கள் என்று தோனி தெரிவித்தார் என்றார்.
யுஸ்வேந்திர சாஹல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்புவதாகக் கூறினார். பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் மெகா ஐபிஎல் ஏலத்தில் சாஹல் வேறு ஒரு அணியில் தேர்ந்தெடுக்க படலாம். அவரை தற்போது பெங்களூரு அணி விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்