முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய மிடில்-ஆர்டர் பேட்டர் சூர்யகுமார் யாதவைப் போல இந்த வடிவ போட்டியில் இவரை விட சிறந்த வீரரை பார்த்ததில்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார்.


சூர்யகுமார் யாதவ்


சர்வதேச அளவில் மிகச் சிறிய காலத்தில் சிறந்த டி20 பேட்ஸ்மேனாக உருவாகியுள்ள சூர்யகுமார் யாதவிற்கு 32 வயதாகிறது. அவர் சமீபத்திய தரவரிசையில் நம்பர் 1 T20I பேட்ஸ்மேனாக முன்னேறி உள்ளார். அதே நேரத்தில் அவர் சமீபத்தில் ICC விருந்துகளில் சிறந்த T20I ஆண்கள் கிரிக்கெட்டர் - 2022 என்ற விருதையும் தட்டி சென்றுள்ளார்.


அவர் கடந்த 6 மாதங்களில் மூன்று T20I சதங்களை அடித்துள்ளார். மேலும் 180.34 என்ற அவரது அசாத்தியமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் டி20 போட்டிகளில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஏபி டி வில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற வெள்ளை பந்து ஜாம்பவான்களை சூர்யகுமாருடன் அவர்களின் ஆக்ரோஷமான பேட்டிங்கிற்காக ஒப்பிட்டுப் பேசியுள்ளார் பாண்டிங்.



ஆட்டத்தை நன்றாக மெருகேற்றி உள்ளார்


"இப்போது உள்ள யாரும் செய்யாததை விட அவர் அதை சிறப்பாகச் செய்கிறார்", என்று பாண்டிங் தி ஐசிசி ரிவியூவின் சமீபத்திய எபிசோடில் கூறினார். "360 டிகிரியில் றன் குவிக்கக் கூடிய பேட்ஸ்மேன்கள் அரிது. சூர்யகுமார் விக்கெட் கீப்பருக்குப் பின்னால் மற்றும் ஃபைன் லெக்கிற்கு மேல் அடிக்கும் சில ஷாட்கள் கூட வைத்திருக்கிறார்," என்று அவர் மேலும் கூறினார். இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடங்கிய சூர்யகுமாரின் பயணத்தை குறித்து பாண்டிங் பேசினார். மும்பை இந்தியன்ஸ் வீரர் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டம்புகளுக்குப் பின்னால் அற்புதமான ஷாட்களை அடித்திருந்தாலும், தற்போது அவர் பந்தை நாலாபுறமும் அடிக்கக்கூடிய வலுவான ஆட்டத்தை உருவாக்கியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார். 


தொடர்புடைய செய்திகள்: Crime: காதலுக்கு எதிர்ப்பு.. இளைஞருடன் சேர்ந்து ரயில்முன் பாய்ந்து உயிரைவிட்ட 10ம் வகுப்பு மாணவி..! பரங்கிமலையில் பரிதாபம்


புதுமையான ஷாட்களை அடிக்கிறார்


"ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஐபிஎல்லில் நன்றாகவே செயல்படத் தொடங்கினார். டீப் பேக்வார்டு ஸ்கொயரின் மேல் பந்தை ஃபிளிக் செய்வதிலும், பந்தை ஃபைன்-லெக்கில் தள்ளுவதிலும் அவர் மிகவும் திறமையானவர். சூர்யா இப்போது தற்போது மேலும் மெருகேறி ஷார்ட் பால்களை அடிக்கவும், கீப்பரின் தலைக்கு மேல் ஷார்ட் பந்துகளை அடிக்கவும் பயிற்சி பெற்றுள்ளார். அதனை பவுண்டரிக்கு மட்டுமல்ல, சிக்ஸருக்கு தள்ளுகிறார், அதுவே அவர் சிறப்பு," என்று அவர் மேலும் கூறினார்.



சூர்யாவை போல இன்னும் நிறைய பேர் செய்வார்கள்


இதனை பார்ப்பவர்கள் பார்த்து கற்றுக்கொள்வார்கள். அந்த ஷாட்களை அடிக்க முயற்சி செய்வார்கள். மற்ற வீரர்களும் அதே அணுகுமுறை மற்றும் இதேபோன்ற ஷாட்களுடன் விளையாடத் தொடங்குவார்கள், இது விளையாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் என்று பாண்டிங் மேலும் கூறினார். "புதுமை வாரியாக, திறமை வாரியாக, நான் விளையாட்டில் இவர் போன்ற சிறந்த வீரரை இதுவரை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். இதனால் வருங்காலம் என்ன ஆகப்போகிறது என்றால், அவர் செய்யும் விஷயங்களை மற்ற பல வீரர்கள் முயற்சி செய்து செய்யப் போகிறார்கள், மேலும் இது உலகெங்கிலும் உள்ள டி 20 விளையாட்டுக்கு மற்றொரு அளவிலான திறமையைச் சேர்க்கப் போகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது, சூர்யா என்ன செய்கிறாரோ, அதே மாதிரி செய்ய இன்னும் சில வீரர்கள் இருக்கப் போகிறார்கள், அது விளையாட்டிற்கு மிகவும் நல்ல விஷயம்," என்று அவர் முடித்தார்.