இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் 3வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. 






இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 329 ரன்களும், இங்கிலாந்து அணி 360 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 31 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 3 ஆம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடி வருகிறது. இப்போட்டியை ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்து வந்த நிலையில் அந்த ஒளிபரப்பில் சர்ச்சை கிளப்பும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 




அதாவது கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள்  சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரை இழந்த உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஆனால் ஸ்கை ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பின் போது ஷேன் வார்னே நடித்த விளம்பரம் ஒளிபரப்பானது. ஒருவர் மறைந்த நிலையில் சுய லாபத்திற்காக மீண்டும் அவரின் விளம்பரத்தை பயன்படுத்துவது சரியா? என ரசிகர்கள் சரமாரியாக விளாசி வருகின்றனர். 






தலைமுடி தொடர்பான க்ளீனிக் விளம்பரத்தில் ஷேன் வார்னே தோன்றிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண