இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் தனது மனைவி அதியா ஷெட்டியுடன் உஜ்ஜையினில் உள்ள மகாலேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்:


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி  4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் ந்திய அணி எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. 


இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.  3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1 ஆம் தேதி இந்தூரில் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பிய கே.எல்.ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவரின் துணைக் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 


கோவிலுக்கு சென்ற கே.எல்.ராகுல்:


தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை கே.எல்.ராகுல் சரியாக பயன்படுத்திக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி கே.எல்.ராகுல் பிரபல பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்தார். பிரமாண்டமாக நடைபெற்ற அவரது திருமணத்தில் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. 


இந்நிலையில் கே.எல்.ராகுல்  மனைவி அதியா ஷெட்டியுடன் சேர்ந்து மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள  12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினார். அங்கு அதிகாலை 4 மணிக்கு நடைபெற்ற பாபா மகாகல் உஜ்ஜயினியின் பாஸ்ம ஆரத்தியில் இருவரும் தம்பதியினர் சகிதம் கலந்து கொண்டனர். இதன் வீடியோஒ இணையத்தில் வைரலான நிலையில் ஒருவேளை மீண்டும் தன்னுடைய பார்மிற்கு திரும்ப வேண்டி கே.எல்.ராகுல் வேண்டிக் கொண்டாரா அல்லது திருமண வேண்டுதலா என ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.