இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஸ்டீவ் ஸ்மித் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்டர்-கவாஸ்கர் டிராபி:
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அக்டோபர் 16 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விளையாட இருக்கிறது. இச்சூழலில் இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஸ்டீவ் ஸ்மித் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிடில் ஆர்டரில் களம் இறங்கும் ஸ்டீவ் ஸ்மித்:
முன்னதாக, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து, அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் தாமாக முன்வந்து களமிறங்கினார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தனது வழக்கமான இடத்தை விட்டு தொடக்க வீரராக களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இச்சூழலில் தான் கேமரூன் கிரீன் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதால், ஸ்டீவ் ஸ்மித் களம் இறங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி பேசியுள்ளார். அதில், "கேமரூன் கிரீனின் காயம் காரணமாக தற்போது நாங்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில்
ஸ்டீவ் ஸ்மித் தனது தொடக்க வீரர் இடத்தில் இருந்து பின்வாங்குவதாக கூறியுள்ளர். இதனால் பேட் கம்மின்ஸ் மற்றும் ஆண்ட்ரூ ஆகியோர் ஸ்டீவ் ஸ்மித் மிடில் ஆர்டரில் விளையாடுவதை உறுதிசெய்துள்ளதுடன், அணியையும் மறுகட்டமைப்பு செய்துள்ளனர். இதனால் அணியின் மிடில் ஆர்டர் இடத்தை நாங்கள் உறுதிசெய்துள்ளதுடன், தொடக்க வீரருக்கான இடத்தை நிரப்பவும் ஆயத்தமாகி வருகிறோம்”என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையை ஜஸ்ப்ரித் பும்ரா எச்சரித்ததை தொடர்ந்து இந்த மாற்றத்தை அந்த அணி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.