ஆஸ்திரேலிய அணி விரர் கேமரூன் கிரீன் முதுகு பகுதியில் ஏற்பட்ட ஸ்ட்ரெஸ் பிராக்சர் காயம் காரணமாக அடுத்த ஆறு மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்


பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்:


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது.


அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இந்த ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் மும்முரமாக தயாராகி வருகிறது.


அதேவேளையில் கடந்த இருமுறை இந்திய அணியிடம் சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி மீண்டும் இந்திய அணியை பழி தீர்க்க காத்திருக்கிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


கேமரூன் கிரீன் விலகல்:


இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி விரர் கேமரூன் கிரீன் முதுகு பகுதியில் ஏற்பட்ட ஸ்ட்ரெஸ் பிராக்சர் காயம் காரணமாக அடுத்த ஆறு மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கேமரூன் கிரீனுக்கு முதுகு பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்ததில் ஸ்ட்ரெஸ் பிராக்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது வேகப்பந்துவீச்சு செய்யக்கூடியவர்களுக்கு சாதாரணமானது என்றாலும். அவருக்கு இது எலும்புக்கு மிகவும் அருகில் இருந்திருக்கிறது.


இப்படி எலும்புக்கு மிக அருகில் இருந்த காரணத்தினால் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு செல்ல கேமரூன் கிரீன் முடிவு செய்து இருக்கிறார். மேலும் இந்த காயம் குறித்து இவ்வளவு விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது.


இத்தோடு அவர் ஆறு மாதம் சர்வதேச கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மட்டும் இல்லாமல் பாகிஸ்தானில்அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.