ரஞ்சி கோப்பை:


மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரஞ்சி கோப்பையின் எலைட் குரூப் போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் திலக் வர்மா மற்றும் கஹ்லாட் ராகுல் சிங் ஆகியோர்  அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். இச்சூழலில் ஹைதராபாத் அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் பரிசுகளை அறிவித்தது.


1 கோடி ரூபாய் பரிசு:


அதன்படி, பிளேட் குரூப் சாம்பியன்களுக்கு 10 லட்ச ரூபாயையும், சிறந்து விளங்குபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயையும் பரிசுகளையும் வழங்குவதாக உறுதியளித்தது. இதுமட்டுமல்லாமல் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரஞ்சி கோப்பையை வென்றால், ஒவ்வொரு வீரருக்கும் BMW கார் வழங்கப்படும் என்றும் ஒட்டுமொத்த அணிக்கும் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும்  ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் சங்கத்தின் தலைவர் ஜெகன் மோகன் ராவ் அர்சினப்பள்ளி உறுதியளித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்த அறிவிப்பு வீரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு இலக்கை அடைவது சாத்தியமில்லை, அதனால் நான் அவர்களுக்கு மூன்று சீசன்களுக்குள் வெற்றி பெற்றால் இந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தேன். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எங்கள் முதல் வருடாந்திர பொதுக் கூட்டத்தை நாங்கள் நடத்தினோம், அதில் முன்னோக்கி செல்வதைப் பற்றி விவாதித்தோம். தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் அகாடமி ஆஃப் எக்ஸலன்ஸ் ஜிம்கானா மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.






வளரும் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நகரின் நான்கு வெவ்வேறு பகுதிகளில் நான்கு அகாடமிகளை செயல்படுத்துவது தொடர்பாகா நான்  முன்மொழிந்தேன். 10 மாவட்டங்கள் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின்  கீழ் வருவதால், திறமைகளை கண்டறிந்து அவர்களை வளர்க்க ஒவ்வொரு மாவட்ட தலைமையகத்திலும் ஒரு மினி ஸ்டேடியத்தை நாங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்என்று கூறினார் ஜெகன் மோகன் ராவ் அர்சினப்பள்ளி.


மேலும் படிக்க: IPL 2024: ஐ.பி.எல் 2024...அட்டவணை வெளியானது...முதல் போட்டியில் மோதும் அணி எது தெரியுமா?


மேலும் படிக்க: GT vs MI: சாம்பியன் பட்டம் வாங்கித் தந்த அணிக்கு எதிராகவே களமிறங்கும் ஹர்திக்!