முன்னாள் சர்வதேச நட்சத்திரங்கள் மற்றும் உள்ளூரில் ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் பத்து நாள் கிரிக்கெட் தொடரான பிக் லீக் கிரிக்கெட் தொடர் சூரத்தில் நடந்து வருகிறது. 


பிக் கிரிக்கெட் லீக்:


யூசுப் மற்றும் இர்ஃபான் பதான், ஷிகர் தவான், லெண்டல் சிம்மன்ஸ் மற்றும் ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோர் இந்த லீக் தொடரில் இடம்பெற்றுள்ளனர், மேலும் கிரிக்கெட்டில் சரியான  வாய்ப்புகள் கிடைக்காததால் விளையாட்டை விட்டு விலகிய ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதே இந்த போட்டியின் நோக்கமாகும். 


கொஞ்ச இதையும் பாருங்க: TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை


தொடக்க BCL சீசன் டிசம்பர் 12, 2024 இல் தொடங்கி டிசம்பர் 22 அன்று முடிவடைகிறது. இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி உட்பட 18 போட்டிகள் நடைபெறும். லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.


விளாமல் இருந்த ஸ்டம்புகள்: 


இந்த நிலையில் இத்தொடரின் 9 லீக் போட்டியில் யுபி பிரி ஸ்டார்ஸ் அணிகள் மற்றும் MP டைகர்ஸ் ஆகிய அணிகள் மோதின, அப்போது போட்டியின் பதினெட்டாவது ஓவரை இந்திய அணியின் முன்னாள் வீரர் பவன் நெகி வீசினார், அப்போது பிரிஜ் ஸ்டார்ஸ் அணியின் வீரர் சிராக் காந்தி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பந்து ஸ்டம்பில் பட்டது, ஆனால் அதிசயமாக ஸ்டம்பில் இருந்த பெய்ல்ஸ் கீழே விழாமல் இருந்தது.






இதையும் படிங்க: Sunil Gavaskar: ”உங்க குருவை பார்த்து கத்துக்கோங்க” கோலிக்கு அறிவுரை கொடுத்த கவாஸ்கர்


இதை உடனடியாக விக்கெட் கீப்பர் மற்றும் நடுவரிடம் சிராஜ் காந்தி கூப்பிட்டு காட்டினார், வழக்கமாக ஸ்டம்ப்பில் பந்து பட்டால் பெய்ல்ஸ் நிச்சயம் கீழே விழுந்து விடும், ஆனால் இங்கு அது கீழே விழாமல் இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.