டி20 உலக கோப்பை பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை அடுத்து தற்போது, டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இந்திய டெஸ்ட் அணிக்கான முதல் போட்டியில் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 


நியூசிலாந்துடனான போட்டிகளை அடுத்து தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கனவே, டி-20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்துவிட்ட நிலையில், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து அவரே கேப்டனாக செயல்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.


மேலும் படிக்க: India Tests Squad Against NZ: நியூசி முதல் டெஸ்ட் இந்திய டீம் அறிவிப்பு! உட்கார வைக்கப்பட்ட கோலி.. கேப்டனாக ரஹானே.!



இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ”ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுவதற்கு ஆலோசனைகள் மேற்கொள்ளப்படு வருகின்றது. இதனால், அவர் பேட்டிங்கில் முழு கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்” என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க இருக்கும் ஒரு நாள் தொடரில், கோலிக்கு பதிலாக ரோஹித்திற்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்படலாம் எனவும், துணை கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


2021 டி20 உலகக்கோப்பையில், சொதப்பலாக விளையாடிய இந்திய அணி, அரை இறுதி சுற்றுக்கு முன்னேறாமல் சூப்பர் 12 சுற்றோடு வெளியேறியது. இதனால், ஏற்கனவே விராட் கோலி அறிவித்ததை போல டி20 கேப்டன்சி பொறுப்பில் இருந்து அவர் விலகியதால் ரோஹித் கேப்டனாக நியமிக்கப்பட்டுவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து கோலியே கேப்டனாக இருப்பார் என்ற நிலையில், ஒரு நாள் கிரிக்கெட்டிற்கு ரோஹித்தை கேப்டனாக நியமனம் செய்து ‘ஸ்ப்லிட் கேப்டன்சி’ முறையை பிசிசிஐ கடைபிடிக்கும் என தெரிகிறது.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண