டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்,நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அதில் முதல் சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்திய அணி எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். 


ஆகவே இந்திய கிரிக்கெட் அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது. அந்தப் போட்டியின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கின் போது சற்று அடிப்பட்டது. ஏற்கெனவே அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவதால் வெறும் பேட்ஸ்மேனாக அணியில் களமிறங்கினார். அவர் முழு தகுதியுடன் இல்லாத சூழலில் எதற்காக அவரை அணியில் எடுத்தனர் என்று பலரும் அணி நிர்வாகத்தை கேள்வி எழுப்பினர். 






இந்நிலையில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்பதை குறிக்கும் விதமாக பிசிசிஐ ஒரு ட்வீட் செய்துள்ளது. அதில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வது போல் படங்களை பதிவிட்டுள்ளது. இந்த ட்விட்டிற்கு  “...... லோடிங்” என்று பதிவிட்டுள்ளது. இது ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதி இல்லை என்று வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஒரு பதிலாக அமைந்துள்ளது. 


மேலும் கடந்த பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்மூலம் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு டி20 போட்டியில் தோல்வி அடைந்தது. மேலும் பாகிஸ்தான் அணி முதல் முறையாக ஒரு டி20 போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு முன்பாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 79 ரன்களில் ஆல் அவுட்டாகி மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்பின்னர் இந்திய அணி மீண்டு வந்து அரையிறுதி போட்டி வரை முன்னேறியது. அதேபோல் இந்த முறையும் நன்றாக மீண்டு வருமா என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும். 


மேலும் படிக்க:‛ப்ளாக் லைவ்ஸ்’ விவகாரம்: பகிரங்க மன்னிப்பு கேட்டார் தெ.ஆப்பிரிக்கா வீரர் டி காக்!