இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ உள்நாட்டு மற்றும் சர்வதேச  கிரிக்கெட் தொடர்களில் இந்த ஆண்டு முதல் அதாவது 2023 முதல் 2026ஆம் ஆண்டு வரையிலும் அதிகாரப்பூர்வ பார்ட்னராக எஸ்பிஐ லைஃப்பை பிசிசிஐ அறிவித்துள்ளது.


பிசிசிஐ உள்நாட்டு மற்றும் சர்வதேச சீசன் 2023-2026க்கான அதிகாரப்பூர்வ கூட்டாளர்களில் ஒருவராக எஸ்பிஐ லைஃப் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) கைகோர்த்துள்ளது.




பி.சி.சி.ஐ. - எஸ்.பி.ஐ.:


இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ லைஃப் - பிசிசிஐயுடன் 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, மேலும் இந்த பார்ட்னர்ஷிப்  செப்டம்பர் 22, 2023 முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 2026ஆம் ஆண்டு வரை விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கான பார்ட்னராக செயல்பட ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் அண்மையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடியபோது இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. 




பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி கூறுகையில்,  “உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக எஸ்பிஐ லைஃப் உடனான எங்கள் கூட்டாண்மையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் துறையில் சிறந்த ஒன்றாக இருந்து வருகிறது, மேலும் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உறுதியான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க விரும்புகிறோம்” என தெரிவித்தார். 


3 ஆண்டுகள்:


பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது,  மதிப்புமிக்க ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கு முன்னதாக, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிசிசிஐயின் உள்நாட்டு மற்றும் சர்வதேச சீசனுக்கான அதிகாரப்பூர்வ பார்ட்னராக எஸ்பிஐ லைஃப் நிறுவனத்தை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். SBI Life இன் சிறப்பான அர்ப்பணிப்பு, கிரிக்கெட் மீதான BCCIயின் பார்வையுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. இந்த ஒத்துழைப்பு கிரிக்கெட் விளையாட்டை அனைத்து மட்டங்களிலும் ஊக்குவிப்பதற்கும் ஆதரிப்பதற்கும் எங்களின் உறுதிப்பாட்டை இன்னும் வலிமையாக்கும். ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு கிரிக்கெட் அனுபவத்தை மேம்படுத்தும் பயனுள்ள பார்ட்னர்ஷிப்பாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார்.


பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா  “எஸ்பிஐ லைஃப் உடனான இந்த அற்புதமான புதிய அத்தியாயத்தில் நாங்கள் நுழையும்போது, ​​இந்தக் கூட்டாண்மை இந்திய கிரிக்கெட்டின் நிதிச் சூழலை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விளையாட்டை மேலும் உயரத்திற்கு உயர்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பார்ட்னர்ஷிப் கிரிக்கெட் உலகிற்கு புதிய ஆற்றலை தரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என கூறினார். 




பிசிசிஐ பொருளாளர் ஆஷிஷ் ஷெலர்  “எஸ்பிஐ லைஃப் உடனான எங்கள் பார்ட்னர்ஷிப் கிரிக்கெட்டின் அடிமட்ட வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பையும், எங்கள் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நாங்கள் ஒன்றாக ஒரு வெற்றிகரமான எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம் என குறிப்பிட்டார். 


பிசிசிஐ இணைச் செயலர்  தேவஜித் சைகியா கூறுகையில்,  “இந்தியாவில் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் எஸ்பிஐ லைஃப் எங்களுடன் இணைந்திருப்பதால், நாங்கள் அவர்களுக்கு அன்பான வரவேற்பு அளிக்கிறோம். விளையாட்டு உலகிற்கு இந்தக் கூட்டாண்மை கொண்டு வரும் சாத்தியக்கூறுகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒன்றாக, நாங்கள்  புதிய வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுத்தருவோம் விளையாட்டின் உணர்வைக் கொண்டாடுவோம்” என கூறினார்.