இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தற்போது வித்தியாசமான முறையில் ‘இம்பாக்ட் பிளேயர்’ என்ற முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய முறையை வரும் ஐபிஎஸ் சீசனில் இருந்து அமலுக்கு கொண்டுவரவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 


இம்பாக்ட் பிளேயர்:


டி20 போட்டியின் போது பங்கேற்கும் அணிகள் விளையாடும் 11 வீரர்களில் ஒரு வீரரை மாற்றிக்கொள்ளலாம். வரும் அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கும் சையத் முஷ்டாக் அலி டி20 டிராபியில் இந்த இம்பாக்ட் பிளேயர் முறையை முதலில் செயல்படுத்தப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும், வரும் ஐபிஎல் 2023 தொடரில் இந்த முறையை பயன்படுத்த இருப்பதாகும் தெரிகிறது. 


கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்லில் ஏதாவது ஒரு வித்தியாசமான முறையை அறிமுகப்படுத்த பிசிசிஐ ஆர்வமாக உள்ளது. ஆனால் முதலில் முதல் தர போட்டிகளில் இந்த முறையை சோதனை செய்த பிறகே ஐபிஎல்லில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 






இதுகுறித்து பிசிசிஐயின் மின்னஞ்சலில், “டி20 கிரிக்கெட்டின் பிரபலமடைந்து வரும் நிலையில், புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்துவது அவசியமாகும். இது இந்த வடிவமைப்பை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், எங்கள் பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல, பங்கேற்கும் அணிகளுக்கும் ஒரு ஆலோசனை கண்ணோட்டத்தில் சுவாரஸ்யமாகவும் மாற்றும். இதையே பிசிசிஐ விரும்புகிறது. 'இம்பாக்ட் பிளேயர்' என்ற கருத்தை அறிமுகப்படுத்துங்கள், அதில் பங்கேற்கும் அணிகள் டி20 போட்டியின் போது விளையாடும் லெவன் அணியில் ஒருவரை ஆட்டத்தின் சூழலின் அடிப்படையில் மாற்றலாம்” என்று தெரிவித்துள்ளது. 


இந்த விதிக்கு "இம்பாக்ட் பிளேயர்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக்கின் ஒரு பகுதியாக இருக்கும் "எக்ஸ்-காரணி" விதியைப் போலவேதான் இதுவும். ஒரு அணிகள் 13 வீரர்களுடன் விளையாட அனுமதிக்கிறது. ஆனால் பெரிய தொடர்களில் அறிமுகமாகும் முன், இதில் உள்ள குறைபாடுகள் மற்றும் நுணுக்கங்களைத் தீர்மானிக்க உள்நாட்டு சுற்றுகளில் சோதிக்கப்படும். அதன் அடிப்படியில்தான் பிசிசிஐ முஷ்டாக் அலி தொடரில் சோதிக்க இருப்பதாக தெரிகிறது. 






அதன்படி, டாஸ் போட்டும் நேரத்தில் விளையாடும் 11 வீரர்களுடன் 4 மாற்று வீரர்களை அணிகள் தேர்ந்தெடுக்க வேண்டும். டீம் ஷீட்டில் பெயரிடப்பட்டுள்ள 4 மாற்று வீரர்களில், ஒரு வீரரை மட்டுமே இம்பாக்ட் பிளேயராகப் பயன்படுத்த முடியும்.


ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக்கில், டீம் ஷீட்டில் 12வது அல்லது 13வது வீரராக பெயரிடப்பட்ட 'எக்ஸ்-ஃபேக்டர் பிளேயர்', முதல் இன்னிங்ஸின் 10வது ஓவரை கடந்து எந்த வீரரையும் மாற்றலாம். அதேபோல், அவர்கள் பேட்டிங் அல்லது பந்தும் வீசலாம். அதேபோல், ஒரு இன்னிங்ஸின் 14வது ஓவர் முடிவதற்குள் எந்த நேரத்திலும் ஒரு இம்பாக்ட் பிளேயர் அறிமுகப்படுத்தப்படலாம்.