BCCI : ரோகித் கோலிக்கு செக்! இதை ஃபாலோ பண்ணா தான் டீம்ல இருக்க முடியும்.. பிசிசிஐ அதிரடி
BCCI : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 6 மாத காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் பிசிசிஐ தரப்பில் இருந்து கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த விதிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
கட்டாய உள்நாட்டு பங்கேற்பு
"பிசிசிஐ வழிகாட்டுதல்களின்படி, தேசிய அணியில் தேர்வு மற்றும் மத்திய ஒப்பந்தங்களுக்கு வீரர்கள் தொடர்ந்து தகுதி பெற வேண்டுமானல் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்பது கட்டாயமாகும்."
பயணக் கொள்கை
“அனைத்து வீரர்களும் அணியுடன் போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். ஒழுக்கம் மற்றும் குழு ஒற்றுமையைப் மேம்படுத்த குடும்பங்களுடன் தனியாக செல்வதற்கு அனுமதியில்லை."
பேக்கேஜ் வரம்புகள்
"வீரர்கள் அணியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட குறிப்பிட்ட அளவிலான உடைமைகளை கொண்டு செல்ல வேண்டும். அதிகப்படியான பொருட்களின் செலவுகளை தனிப்பட்ட வீரர் ஏற்க வேண்டும்."
இதையும் படிங்க: Sitanshu Kotak :புதிய பேட்டிங் பயிற்சியாளர் தேடல்? டாப் லிஸ்ட்டில் இவர் பெயர் தான்! யார் இந்த சிதான்ஷு கோடக்
தனிப்பட்ட பணியாளர்கள் மீதான கட்டுப்பாடு
"தனிப்பட்ட பணியாளர்கள் (எ.கா., தனிப்பட்ட மேலாளர்கள், சமையல்காரர்கள், உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு)உடன் வருவதை அனுமதிக்காது என்றும் ஒரு வேளை பிசிசிஐ தரப்பில் அனுமதி கொடுத்தால் மட்டுமே அழைத்து வர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உபகரணங்கள் கொண்டு செல்லுதல்:
“பெங்களூருவில் உள்ள செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்க்கு அனுப்பப்படும் உபகரணங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் தொடர்பாக வீரர்கள் அணி நிர்வாகத்துடன் தெரிவிக்க வேண்டும். தனி ஏற்பாடுகள் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகள் வீரரின் பொறுப்பாகும்."
பயிற்சி வருகை
"அனைத்து வீரர்களும் திட்டமிடப்பட்ட பயிற்சிகளில் முழு நேரமும் அணியினருடன் இருக்க வேண்டும் மற்றும் வெளியேயும் ஒன்றாக பயணிக்க வேண்டும்."
தனி சூட்டிங்கிற்கு அனுமதியில்லை:
தொடர் நடக்கு பொழுது அல்லது சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் தனிப்பட்ட படப்பிடிப்புகள் அல்லது ஒப்புதல்களில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை."
குடும்பத்தினரின் அனுமதி
"வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களின் போது 45 நாட்களுக்கும் மேலாக இருக்கும் வீரர்களை பார்க்க இரண்டு வார காலத்திற்கு வரை குடும்பத்தினர் அவர்களுடன் இருக்கலாம்.
பிசிசிஐ படப்பிடிப்புகள்:
"பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்புகள், விளம்பர நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு வீரர்கள் இருக்க வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி நிறைவு கொள்கை:
"திட்டமிட்டதை விட முன்னதாக போட்டிகள் முடிவடைகிறதா என்பதைப் பொருட்படுத்தாமல், போட்டித் தொடர் அல்லது சுற்றுப்பயணத்தின் திட்டமிடப்பட்ட தேதி வரை வீரர்கள் அணியுடன் இருக்க வேண்டும்."