நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தச் சூழலில் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 


இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடைசியாக 2019ஆம் ஆண்டு பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டி முதல் ஈடன் கார்டன் மைதானத்தில் பெல் அடித்து போட்டியை தொடக்கும் முறை அறிமுகம் செய்து வைத்தனர். 






இந்நிலையில் அதேபோல் இன்று நடைபெற்று வரும் டி20 போட்டியையும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பெல் அடித்து தொடக்கி வைத்தார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கங்குலிக்கு என்று எப்போதும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்த மைதானத்தில் அவர் பிசிசிஐ தலைவராக இருக்கும் போது முதல் முறையாக டி20 போட்டியை தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.  முதல் 6 ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. 10ஆவது ஓவரின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி ரன்விகிதம் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஈடன் கார்டனும் டிராவிட்டும்'- ராசியான மைதானத்தில் ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி ?