Ganguly on T20 WC Final: ”டிவியில் பார்க்கும் அணி வேற..” - டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசி.,க்கு ஆதரவு தந்த தாதா!

அரையிறுதி போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதி போட்டிக்குள் தகுதி பெற்றது.

Continues below advertisement

இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு இறுதி போட்டியை நெருங்கி உள்ளது.  அரையிறுதி போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதி போட்டிக்குள் தகுதி பெற்றது. இந்நிலையில், இன்று துபாயில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

Continues below advertisement

பெரிதும் எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருக்கும் இந்த இறுதிப்போட்டியை காண உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இரண்டு அணிகளுக்குமே கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவு இருக்கும் நிலையில், முன்னாள் இந்திய அணி கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி நியூசிலாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தாதாவின் இந்த முடிவு, நியூசிலாந்துக்கு ஆதரவு அளிக்கும் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. 

நவம்பர் 13-ம் தேதி, 40வது ஷார்ஜா புத்தக திருவிழாவில் பங்கேற்றிருந்த கங்குலி, இறுதிப்போட்டி குறித்த கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அப்போது, “உலக விளையாட்டு தளத்தில் இது நியூசிலாந்துக்கான நேரம். ஆஸ்திரேலியா சிறந்த அணிதான் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், கடந்த சில காலமாக அவர்கள் கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கின்றனர். நாம் டிவியில் பார்ப்பதைவிட நியூசிலாந்து அணிக்கு அதிக தைரியம் உண்டு. சிறிய நாடு என்றாலும், நிறைய உத்வேகம் இருக்கின்றது. அதனால், எனக்கு இம்முறை நியூசிலாந்துதான் என தோன்றுகிறது” என்றார்.

கோப்பை யாருக்கு?

நடப்பு டி 20 உலகக்கோப்பை தொடரின் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளில் ஆஸ்திரேலியா அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல பார்மில் உள்ளது. நியூசிலாந்தை பொருத்தவரை, சூப்பர் 12 சுற்றில் ஐந்தில் ஒரு போட்டியை மட்டும் இழந்து, நான்கில் வெற்றி பெற்றது. நாக் -அவுட் சுற்றில் பாகிஸ்தானை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 5 முறை கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி, இந்த முறை கோப்பையை கட்டாயம் வென்றாக வேண்டும் என்று களமிறங்கும். அதேபோல், 2019 ஒருநாள் உலகக்கோப்பை இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி கோப்பையை தவறவிட்டது. இதனால் இந்தமுறை கட்டாயம் கோப்பை வெல்ல நியூசிலாந்து அணி தீவிரமாக முயற்சிக்கும். 

கடந்த 2015 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி கோப்பையை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement