India Squad BGT: தென்னாப்ரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அணி அறிவிப்பு:


 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான T20I அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு, பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான அணிய்ன் விவரங்களும் வெளியாகியுள்ளன.


ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை, புதியதாக அணியில் அபிமன்யு ஈஸ்வரன் இடம்பெற்றுள்ளார்.  அவர் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது  அணியில் இடம்பெற்று இருந்தாலும் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் அணியில் உள்ளனர்.


முதல்-தேர்வு விக்கெட் கீப்பருக்கு வரும்போது, ​​ரிஷப் பண்ட்ட தொடர்ந்து மற்ற கீப்பர்கள் கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் அகியோர் அணியில் உள்ளனர். வேகப்பந்து வீச்சு பிரிவில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா ஆகியோர் உள்ளனர். வாஷிங்டன் சுந்தர் ரெட்-பால் கிரிக்கெட்டில் தனது சிறந்த ஃபார்மிற்கான வெகுமதியாஅக் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்யவுள்ளார்.


பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்திய அணி:


ரோகித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (WK), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (WK), அஷ்வின், ஜடேஜா, முகமது சிராஜ் , ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.


இருப்பு: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி:


சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), ரின்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (WK), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான் , யாஷ் தயாள்


கெய்க்வாட்டிற்கு அணியில் இடமில்லை:


ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கர் உட்பட பல ஜாம்பவான்களால் அடுத்த சிறந்த வீரராக பாராட்டப்பட்டார். இருப்பினும், அவருக்கு இரண்டு விதமான அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், ரஹானே மற்றும் புஜாராவை தேசிய அணியில் இருந்து விலக்கியதை அடுத்து,  கெய்க்வாட் அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ​பிசிசிஐ அவருக்கு பதிலாக, அபிமன்யு ஈஸ்வரனை தேர்ந்தெடுத்துள்ளது.


இந்திய அணியின் அடுத்த சுற்றுப்பயணங்கள்:


இந்திய அணி தற்போது உள்ளூரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதைதொடர்ந்து,



  • நவம்பர் 8ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை, தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 4 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது

  • அதைதொடர்ந்து, நவம்பர் 22ம் தேதி தொடங்கி ஜனவரி 7ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது