முதல் நாள் ஆட்டம்:


இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. தற்போது 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.


இச்சூழலில் தான் முதல் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களம் இறங்கியது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி. அந்த வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இன்று (பிப்ரவரி 2) தொடங்கியது இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் இல்லாமல் இந்திய அணி களம் இறங்கியது.


அதன்படி, முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அந்த வகையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. அதன்படி, யஷஸ்வி ஜெய்ஸ்வால்  179 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


கவாஸ்கரின் சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வால்:


இந்நிலையில் தான் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்றைய போட்டியில் ஒரு சாதனையை செய்திருக்கிறார். அதன்படி,  இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரராக இரண்டாவது இடத்தில் இருக்கும் சுனில் கவாஸ்கரின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்திருக்கிறார்.


இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் கருண் நாயர். கடந்த 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற அந்த போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் 232 ரன்கள் குவித்தார். அதேபோல்,அந்த ஆட்டத்தில் 381 ரன்கள் களத்தில் நின்ற கருண்நாயர் 32 பவுண்டரிகள் 4 சிக்ஸர் உட்பட மொத்தம் 303 ரன்களை குவித்திருந்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் 300 ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 


அவருக்கு அடுத்த இடத்தில் சுனில் கவாஸ்கர் 179 ரன்களை குவித்து இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்நிலையில் தான் இன்றைய போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 170 ரன்களை குவித்து கவாஸ்கரின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.இவர்களுக்கு அடுத்து முகமது அசாருதீன் ஒரே நாளில் 175 ரன்கள் அடித்து இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.


மேலும் படிக்க: IND Vs ENG 2nd Test: இங்கிலாந்துக்கு எதிராக கலக்கிய ஜெய்ஸ்வால்… முதல் நாள் முடிவில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி!


 


மேலும் படிக்க: IND vs ENG: பாதியிலேயே கமெண்ட்ரி செய்வதை நிறுத்திச்சென்ற சுனில் கவாஸ்கர்! காரணம் என்ன?