வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக வங்கதேச கிரிக்கெட் அணியில் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அதன்படி, வங்கதேச கிரிக்கெட் வாரியம் மூன்று வடிவங்களிலும் புதிய கேப்டனின் பெயரை அறிவித்துள்ளது. இதையடுத்து, ஹகிப் அல் ஹசன் இனி எந்த வடிவத்திலும் அணியின் கேப்டனாக இருக்க மாட்டார் என தெரிகிறது. 


புதிய கேப்டன் யார்..? 


வங்கதேச கிரிக்கெட் வாரியம் நஸ்முல் ஹுசைன் சாண்டோவை மூன்று வடிவங்களிலும் கேப்டனாக நியமித்துள்ளது. 25 வயதான சாண்டோ வங்கதேசத்தின் கேப்டனாக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். இதிலிருந்து 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு நஸ்முல் ஹுசைன் சாண்டோ கேப்டனாக இருப்பார் என்பது தெளிவாகியுள்ளது. 


வங்கதேசத்தின் இந்த திறமையான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஏற்கனவே, அந்நாட்டு அணிக்காக சில போட்டிகளில் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார். 


ஹகிப் அல் ஹசன் எங்கே..? 


நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் நஸ்முல் ஹுசைன் சாண்டோ கேப்டனாக இருந்தார். இந்த போட்டிகளின்போது ஹாண்டோ, வங்கதேச அணியை சிறப்பாகவே வழிநடத்தினார். அதேசமயம் 2023 உலகக் கோப்பையின் கடைசிப் போட்டியில், ஷகிப் அல் ஹசன் இல்லாதபோது, ​​சாண்டோவுக்கு கேப்டன்சி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


 முன்னதாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒருநாள் கேப்டனாக ஹகிப் அல் ஹசனை பரிசீலித்தது. ஆனால், ஒரு சில வீரர்கள் சாண்டோவின் பெயரையே முன்வைத்தனது. ஹகிப் அல் ஹசன் தனது கண்களில் சில பிரச்சனைகள் உள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் காரணமாக இவர் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. 


ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இவர், கண் பிரச்சினை காரணமாக டெஸ்டில் தொடர வாய்ப்பில்லை என்றாலும், டி20 உலகக் கோப்பையின்போது அணிக்கு தலைமை தாங்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அனைத்து வடிவங்களிலும் சாண்டோவையே கேப்டனாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ஹகிப் அல் ஹசன் கடந்த 12 மாதங்களாக வங்கதேச அணியை சிறப்பாகவே வழிநடத்தி கொண்டு சென்றார். இவரது தலைமையில் வங்கதேச அணி, இங்கிலாந்து தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது. 


சாண்டோவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை: 


இதுவரை நஸ்முல் ஹுசைன் ஷாண்டோ வங்கதேச அணிக்காக மொத்தம் இரண்டு டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் மூன்று டி20 சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நஸ்முல் ஹுசைன் சாண்டோ இதுவரை வங்கதேச அணிக்காக 25 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 28 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில், அவர் ஐந்து சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்களுடன் 1449 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் இரண்டு சதங்கள் மற்றும் 8 அரை சதங்களுடன் 1501 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர, சர்வதேச டி20 போட்டிகளில் ஷாண்டோ 602 ரன்கள் எடுத்துள்ளார்.