ODI World Cup 2023 ban vs afg: ஐசிசி உலகக் கோப்பையிl ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் மோதல்:


தர்மசாலாவில் நடைபெறும் உலகக் கோப்பையின் மூன்றாவது லீக் போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் அணி ஆப்கானிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்-ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.


அணி விவரங்கள்:


ஆப்கானிஸ்தான்:


ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-எச். ஃபசல்ஹக் பாரூக்கி


வங்கதேசம்:


தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, தஸ்கின் அகமது, ஷோரிபுல் ரஹ்மத், ஷோரிபுல் இஸ்லாம்


நேருக்கு நேர்:


சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 9 முறை வங்கதேச அணியும், 6 முறை ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது.


மைதானம் எப்படி?


போட்டி நடைபெறும் தர்மசாலா மைதானம் பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. மீடியம் பேசர்கள் விக்கெட் வேட்டை நடத்த ஏதுவாக இருக்கும். இதுவரை அங்கு நான்கு சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. வானிலையை பொருத்தவரையில் தர்மசாலாவில் பகலில் அதிகபட்ச வெப்பநிலை 30° C ஆக இருக்கும், ஆனால் மாலையில் 22° C ஆகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டி பாதிக்கப்பட வாய்ப்பில்லை.


பலம் & பலவீனங்கள்:


ஆப்கானிஸ்தான் அணி வழக்கம்போல் தனது வெற்றிக்கு சுழற்பந்து வீச்சையே பெரும்பாலும் நம்பியுள்ளது. அதேநேரம், அணியின் முன்கள வீரர்களின் அதிரடியான ஆட்டமும், நல்ல ஃபார்மும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தால், அணியை மீட்பதற்கான சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாத ஆப்கானிஸ்தான் அணியின் பின்னடைவாக கருதப்படுகிறது. வங்கதேச அணியை பொருத்தவரையில் தொடக்க வீரர் தமிம் இக்பால் விளையாடாதது முதல் பின்னடைவாகும். இருப்பினும் கேப்டன் ஷகிப் அல் ஹசன், துணை கேப்டன் லிட்டன் தாஸ், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான தன்சித் ஹசன், ஹிரிடோய் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் முகமதுல்லா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் இருப்பது கூடுதல் வலுவாக உள்ளது. வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவிச்சு என இரண்டு யூனிட்டும் சரியான கலவையில் வங்கதேசத்திற்கு அமைந்துள்ளது.