BAN vs AFG Asia Cup 2023 LIVE: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய வங்காள தேசம்; 89 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி..!
BAN vs AFG Asia Cup 2023 LIVE Score: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடி வரும் நிலையில், அதுதொடர்பான தகவல்களை உடனுக்குடன் காணலாம்.
ஆஃப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், வங்களாதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் கேப்டன் அஸ்மதுல்லா ஷாகிதி மட்டும் 51 ரன்கள் சேர்த்திருந்தார்.
ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தாலும், ரஷித் கான் மட்டும் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார்.
41வது ஓவரின் 2வது பந்தில் ஆஃப்கானிஸ்தான் அணி தனது 7வது விக்கெட்டை இழந்துள்ளது.
60 பந்துகளில் 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஃப்கானிஸ்தான் உள்ளது. ஆனால் கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டும்தான் கைவசம் உள்ளது.
40 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்துள்ளது.
39 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்துள்ளது.
38வது ஓவரின் 2வது பந்தில் ஷகிதியின் விக்கெட்டை இழந்து ஆஃப்கானிஸ்தான் அணி தத்தளித்து வருகிறது.
ஆஃப்கானிஸ்தான் அணி 37வது ஓவரின் முதல் பந்தில் நஜிபுல்லாவின் விக்கெட்டை இழந்துள்ளது.
35 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் சேர்த்துள்ளது.
3 விக்கெட்டுகளை இழந்தாலும் சீராக வெற்றி இலக்கை நோக்கி முன்னேறும் ஆஃப்கானிஸ்தான் அணி 32 ஓவரில் 158 ரன்கள் சேர்த்துள்ளது.
335 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 24 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 101 ரன்கள் சேர்த்துள்ளது.
நிதானமாக ஆடி வந்த ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹமத் ஷா தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
16வது ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் சேர்த்துள்ளது.
335 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட்டை இழந்துள்ளது.
வங்காள தேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 335 ரன்கள் இலக்கை எட்ட களமிறங்கியுள்ளது.
வங்காள தேச அணியின் துவக்க வீரர் மெஹதி ஹைசன் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ஹொசைன் ஷாண்டோ அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தியுள்ளனர்.
சிறப்பாக ஆடிவரும் வங்காள தேச அணி 42 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் சேர்த்துள்ளது.
வங்காள தேச அணியின் துவக்க வீரர் மெஹதி ஹைசன் அதிரடியாக ஆடி சதம் விளாசி தொடர்ந்து ரன் குவித்து வருகிறார்.
40 ஓவர்கள் முடிவில் வங்காள தேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ரன்கள் சேர்த்து வரும் வங்களாதேச அணி 28.1 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது.
25 ஓவர்கள் முடிவில் வங்காள தேசம் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்துள்ளது.
2 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடி வந்த பங்களாதேச அணி 19.2 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை எட்டியுள்ளது.
15 ஓவர்கள் முடிவில் வங்காள தேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் 10 ஓவரில் அதிரடியாக ஆடி வந்த வங்காள தேச அணி 10 வது ஓவரின் கடைசிப் பந்திலும், 11வது ஓவரின் 3 வது பந்திலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.
10 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் சேர்த்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் வங்களதேச அணி விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில், அந்த அணி வீரர்கள் அதிரடி காட்டி வருகின்றனர்.
Background
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
ஆசியக்கோப்பை கிரிக்கெட்:
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை நடந்த 2 லீக் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்றுள்ளன. நேற்று நடந்த 3வது போட்டி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டில் மழையால் கைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் மோதல்
இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறுவது யார்? என்பதை கணிப்பது கடினமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுவரை இவ்விரு அணிகளும் 14 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 8 போட்டிகளில் வங்காளதேசமும், 6 போட்டிகளில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -