தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் பாகிஸ்தான் அணி ஃபார்முக்கு திரும்ப போராடிக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணிலேயே அந்த அணி ஒயிட்வாஷை சந்தித்தது, அதன்பின் பிசிபி தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா மற்றும் முஹம்மது வாசிம் தலைமையிலான தேர்வுக் குழு நீக்கப்பட்டது என பெரும் கவலைக்குரிய நிலையில் அணி உள்ளது.


பாபரின் தலைமை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவரது பேட்டிங்கும் சொதப்பி வருவதால் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால் கராச்சியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிரடியாக சதம் அடித்து விமர்சகர்களுக்கு ஸ்டைலாக பதில் அளித்தார்.



திணறிய பாகிஸ்தான்


திங்களன்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் 15 ஓவர்களில் 48 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது பாகிஸ்தான். திணறிய அணியை சௌத் ஷகீல் உடன் இணைந்து மீட்டு கொண்டு வந்தார் கேப்டன் பாபர். பாபருடன் இணைந்து 62 ரன்களை அடித்த ஷகீல் நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். பாக்கிஸ்தானுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் மிகவும் அவசியமாக இருந்தது, அந்த நிலையில் காலடி எடுத்து வைத்த பாபர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷகீல் அவுட் ஆன நிலையில் அவருடன் இணைந்து நிற்க இன்னொருவர் தேவைப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்: IND vs SL: இலங்கைத் தொடரில் ஹர்திக் தலைமையில் களமிறங்கும் இளம் பட்டாளம்..? 2023ல் அதிரடி மாற்றமா..?


மீட்ட பாபர்


தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக விளையாடி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவிடம் இருந்து அந்த உதவி கிடைத்தது. பாபர் தனது ஒன்பதாவது டெஸ்ட் சதத்தை அடிக்க நியூசிலாந்து தாக்குதலுக்கு எதிராக துணிச்சலுடன் போராடினார். இந்த சதத்துடன், ஒரு காலண்டர் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஐம்பது ப்ளஸ் ஸ்கோர்கள் அடித்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் உலக சாதனையை அவர் முறியடித்தார். 



பாபர் முறியடித்த சாதனைகள்



  • பாண்டிங் 2005 ஆம் ஆண்டு 24 ஐம்பது ப்ளஸ் ரன்கள் சாதனையானது 17 நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பாபர் அசாமால் முறியடிக்கப்பட்டுள்ளது. கராச்சி டெஸ்டில் தனது 25 வது ஐம்பது-பிளஸ் ஸ்கோரைக் கடந்ததன் மூலம், அந்த சாதனையை கடந்துள்ளார். இந்த எண்ணிக்கையில் 17 அரைசதங்கள் மற்றும் எட்டு சதங்கள் அடங்கும். 

  • எட்டு சதங்கள் மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சதம் எடுத்தோர் பட்டியலில் மூன்றாவது இடத்தை, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், மஹேல ஜெயவர்த்தனே மற்றும் கிரீம் ஸ்மித் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறார். 

  • 2022ல் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்தவர் என்ற சாதனையும் பாபர் வசமானது. 

  • இந்த ஆண்டு மூன்று வடிவங்களிலும் சேர்த்து அவர் 2542 ரன்களை குவித்துள்ளார், இதன் மூலம் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அணியின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான முகமது யூசுப்பைத் முந்தியுள்ளார்.

  • உள்ளபடியே, இந்த ஆண்டு பாகிஸ்தான் வீரர்களில் அதிக ரன் குவிதவர் என்ற பெயரும் பெற்றுள்ளார்.