Watch Video : பாபர் ஓஹ் பாபர்! எப்படி இருந்த மனுஷன்.. மீண்டும் ஒரு டக் அவுட் ! தென் ஆப்பிரிக்கா வெற்றி
Babar Azam : தென் ஆப்பிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி போட்டியில் பாகிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று, இப்போட்டியில் பாபர் அசாம் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் செய்து, 3 T20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை தென் ஆப்ரிக்கா தோற்கடித்தது.
டர்பனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 183 ரன்கள் எடுத்திருந்தது, ஆனால் அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Just In




டேவிட் மில்லர் புயல்:
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது, அணியின் ஸ்கோர் 28 ஆக இருந்த நிலையில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் உள்ளிட்ட மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் பெவிலியன் திரும்பினர். அதன் பிறகு டேவிட் மில்லர் தனது அதிரடியான பேட்டிங் மூலம் தென் ஆப்பிரிக்க அணியை சரிவிலிருந்து மீட்டார், மில்லர் 40 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார், இந்த இன்னிங்ஸில் அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களையும் அடித்தார். அவரைத் தவிர, ஜார்ஜ் லிண்டே பேட்டிங்கிலும் பிரகாசித்தார், அவர் 24 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் எடுத்தார்.
பாபர் டக் அவுட்:
இந்த இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது, பெரிய அளவில் ஃபார்மில் இல்லாத பாபர் அசாம் 4 பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
பாகிஸ்தான் தோல்வி:
184 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது, கேப்டன் முகமது ரிஸ்வான் ஒரு முனையில் இருந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினாட். சாம் அய்யூப் 31 ரன்களில் அதிரடியாக விளையாடி ரிஸ்வானுக்கு சிறிது நேரம் நல்ல பங்களிப்பை அளித்தார், ஆனால் பவர்பிளே முடிந்த உடனேயே அவரும் பெவிலியன் திரும்பினார். இந்தப் போட்டியில் ரிஸ்வான் 74 ரன்கள் எடுத்தார். ஜார்ஜ் லிண்டே மற்றும் கியூனா மஃபாகா சிறப்பான பந்துவீச்சால், தென் ஆப்பிரிக்கா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.