ராமர் கோவில் திறப்பு விழா:


மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது


இந்த கும்பாபிஷேகம் விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார்  எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்பதற்காக ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.


 


அதேபோல் இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்க கிரிக்கெட் ஜாம்பவான்களான கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்ட முக்கிய விளையாட்டு வீரர்கள் அழைக்கப்பட்டனர்


மேலும் இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே, ரவிசந்திரன் அஸ்வின், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரும் அழைக்கப்பட்டனர். இதுபோக, இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். சாய்னா நேவால், பி.வி.சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் ப்ல்லேலா கோபிசந்த், பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, கால்பந்து வீராங்கனை கல்யாண் சௌபே, தடகள வீராங்கனை கவிதா ரவுத் துங்கர், பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் வீராங்கனை தேவேந்திர ஜன்ஜாடியா ஆகியோருக்கும் விழாவுக்கு அழைப்பு வந்துள்ளது


விழாவை புறக்கணித்த எம்.எஸ்.தோனி:


அந்த வகையில் பல முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலலந்து கொண்டனர். விளையாட்டு வீரர்களை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் பிரசாத், அணில் கும்ப்ளே மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி கலந்து கொள்ளவில்லை.


இந்நிலையில் அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, தோனி சாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் விருப்பம் காட்டுவது இல்லை என்பதால், இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல் சமூக வலைதளங்களிலும் அதிக ஈடுபாடு இல்லாத அவர், பொது இடத்திற்கு வந்து பிரபலம் தேடிக்கொள்ள விரும்பியது கிடையாது. இதுபோன்ற சில காரணங்களினால் தான்  இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இருந்திருப்பார் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க: Cheteshwar Pujara: முதல் தர போட்டியில் 20,000 ரன்கள்.. கவாஸ்கர், சச்சின், டிராவிட்டின் சிறப்பு கிளப்பில் நுழைந்த புஜாரா!


மேலும் படிக்க: Virat Kohli: அச்சச்சோ! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இருந்து விராட் கோலி விலகல் - என்னாச்சு?