இலங்கை தற்போது மிகவும் கடுமையான பொருளாதார சூழல் நிலவி வருகிறது. இலங்கையில் உணவுப்பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், அந்த நாட்டு மக்கள் மிகவும் கடுமையான நெருக்கடியில் தவித்து வருகின்றனர். இலங்கை வாழ் மக்களுக்கு உலக நாடுகள் உதவி வருகின்றனர்.


இந்த சூழலில், இலங்கையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்த நிலையில், ஐ.நா. அமைப்பு இயன்றதை செய்யுங்கள் என்று உலக நாடுகள் இலங்கை மக்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துவருகிறது.




இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் பொருளாதாரத்தால் நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் இருவரும் ஐ.நா.வின் கோரிக்கையான 47.2 மில்லியன் டாலர் நிதியை பெறுவதற்கு அவர்கள் நண்பர்களிடம் இயன்றதை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


'






கொழும்புவில் உள்ள ஆஸ்திரேலியா தூதரகம் வெளியிட்டுள்ள வீடியோவில் மிட்செஸ் ஸ்டார்க் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இதற்காக பேசியுள்ளனர். ஐ.நா. இலங்கைக்கு உதவ உள்ளது என்றும், ஆஸ்திரேலியா இதை செய்வதில் பெருமை கொள்கிறோம் என்றும், நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு இலங்கைக்கு எதிரான நெருக்கடியை விரட்டுவோம் என்று பேசியுள்ளனர்.


 






ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. தற்போது நடைபெற்று முடிந்துள்ள 2 டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.  இலங்கை மக்களுக்கு உதவ ஆதரவுக்குரல் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண