கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஷேன் வார்ன். இவருடைய 53வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஷேன் வார்ன் கிரிக்கெட் களத்தில் பல சிறப்பான தரமான சம்பவங்களை ஷேன் வார்ன் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர் 708 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 


 


இந்நிலையில் அவருக்கும் 23 என்ற ஜெர்ஸி நம்பருக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது என்ன தொடர்பு தெரியுமா? 


 


ஷேன் வார்ன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 23 என்ற நம்பர் கொண்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடினார். அதற்கு ஒரு காரணம் உண்டு. முதலில் பலர் அதற்கு காரணம் வார்ன்  கூடைப்பந்து ஜாம்பவான் வீரர் மைக்கேல் ஜோர்டனின் ரசிகர் என்று தெரிவித்து வந்தனர். ஏனென்றால் மைக்கேல் ஜோர்டன் 23 என்ற நம்பர் ஜெர்ஸியை அணிந்து விளையாடினார். உண்மையில் வார்ன் 23 ஜெர்ஸியை போட இது காரணம் இல்லை. 


 






23 நம்பர் ஷேன் வார்ன்க்கு பிடிக்க காரணம்?


ஷேன் வார்ன் 1980களில் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டுவதற்கு முன்பாக அமெரிக்க கால்பந்து எனப்படும் AFL அதிகமான நாட்டம் கொண்டிருந்தார். அந்த விளையாட்டில் ஹாவ்தோர்ன் அணிக்காக டெர்மெட் பிரேர்டன் விளையாடினார். அவரை ஷேன் வார்ன் தன்னுடைய ஐகான் வீரராக கருதி வந்தார். டெர்மெட் பிரேர்டன் 23 நம்பர் ஜெர்ஸியை அணிந்து விளையாடினார். அவரைப் பார்த்து ஷேன் வார்ன் 23 என்ற நம்பர் கொண்ட ஜெர்ஸியை அணிந்து விளையாட தொடங்கினார். 


 






மேலும் ஷேன் வார்ன் மெல்பேர்னிலுள்ள அவருடைய இரண்டு வீட்டிலுள்ள நீச்சல் குளத்திலும் இந்த 23 நம்பர் இருக்கும் வகையில் வடிவமைத்திருந்தார். அத்துடன் மெல்பேர்னில் நடைபெற்ற நைட் கிளப் ஒன்றில் 23 என்ற பிரிவிற்கு ஷேன் வார்ன் பெயரை வைத்திருந்தனர். 23 நம்பர் ஜெர்ஸியை மைக்கேல் ஜோர்டன், டேவிட் பெக்காம் உள்ளிட்ட வீரர்களும் அணிந்து விளையாடினர். 


ஒருநாள் தொடரில் ஷேன் வார்னின் ஓய்விற்கு பிறகு 23 நம்பர் ஜெர்ஸியை மைக்கேல் கிளார்க் அணிந்து விளையாடினார். இதை ஷேன் வார்ன் தன்னிடம் கொடுத்து அணிந்து கொண்டு விளையாட கூறியதாக மைக்கேல் கிளார்க் தெரிவித்திருந்தார். 


 






 






 


இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.