கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் ஆட்டம் டிரா ஆனது. இதன்காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தானின் இடத்தில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை.


பாகிஸ்தான் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 7-ஆவது இடத்தில் உள்ளது.  நியூசிலாந்து அதே 8ஆவது இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இலங்கை மூன்றாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 4ஆவது இடத்திலும், இங்கிலாந்து 5ஆவது இடத்திலும் உள்ளன. அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் 6ஆவது இடத்தில் இருக்கிறது.






2 டெஸ்ட் போட்டிகள்,  3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் கராச்சி நகரில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130.5 ஓவர்களில் 438 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 161 ரன்கள் விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக அகா சல்மான் சதம் விளாசினார்.


இரட்டைசதம்:


நியூசிலாந்து தரப்பில் கேப்டன் சவுதீ 3 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 194.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 612 ரன்களை குவித்தது.


Rishabh Pant: பண்ட்டின் புகைப்படங்களை பகிர்வதை நிறுத்துங்கள்; முடிந்தால் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் - அஸ்வின்..!


கேன் வில்லியம்சன் இரட்டை சதம் விளாசினார். மொத்தம் 21 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 395 பந்துகளில் 200 ரன்களை வில்லியம்சன் விளாசினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு 5வது இரட்டை சதம் ஆகும்.
194.5ஆவது ஓவரில் அவர் தனது 5வது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.


அதைத் தொடர்ந்து கேப்டன் சவுதீ டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 612 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 174 ரன்கள் பின்னிலையுடன் பாகிஸ்தான் விளையாடி வந்தது.


பின்னர், அந்த 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை விளையாடியது. கடைசி நாள் முடிவடைந்த நிலையில், 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது.