சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களை பாராட்டும் விதமாக விருது வழங்கி கவுரவித்து வருகிறது. ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும், மூன்று வகையான பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாகவும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், நடப்பாண்டின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டியாளர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.






 


ஐசிசியின் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான போட்டியாளர்கள்; பாபர் அசாம் (பாகிஸ்தான்), சிகந்தர் ராசா (ஜிம்பாப்வே), டிம் சவுத்தி (நியூசிலாந்து), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)


ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருது; அமெலியா கெர் (நியூசிலாந்து), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), பெத் மூனி (ஆஸ்திரேலியா), நாட் ஸ்கைவர் (இங்கிலாந்து)


ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்; ஜானி பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து), உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா), ககிசோ ரபாடா (தென் ஆப்ரிக்கா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)


ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்: பாபர் ஆசம் (பாகிஸ்தான்), சாய் ஹோப் (மேற்கிந்திய தீவுகள்), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஆடம் ஜம்பா (ஆஸ்திரேலியா)


ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரங்கனை:


அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா), ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்ரிக்கா), அமெலியா கெர் (நியூசிலாந்து), நாட் ஸ்கிவர் (இங்கிலாந்து)


ஆண்டின் சிறந்த டி-20 வீரர்; சாம் கரன் (இங்கிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்), சூர்யகுமார் யாதவ் (இந்தியா)


ஆண்டின் சிறந்த டி-20 வீராங்கனை; நிடா தார் (பாகிஸ்தான்), சோஃபி டெவின் (நியூசிலாந்து), ஸ்மிருதி மந்தனா (இந்தியா), தஹ்லியா மெக்ராத் (ஆஸ்திரேலியா)


ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரர்; ஃபின் ஆலன் (நியூசிலாந்து), மார்கோ ஜான்சன் (தென் ஆப்ரிக்கா), அர்ஷ்தீப் சிங் (இந்தியா), இப்ராஹிம் சத்ரன் (ஆப்கானிஸ்தான்)


ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனை; யாஸ்திகா பாட்டியா (இந்தியா), டார்சி பிரவுன் (ஆஸ்திரேலியா), ஆலிஸ் கேப்ஸி (இங்கிலாந்து), ரேணுகா சிங் (இந்தியா)


சிறந்த வீரர்களை தேர்வு செய்வதற்கு ரசிகர்கள் வாக்களிப்பது அடுத்த வாரம் தொடங்கும், அதன்படி,  icc-cricket.com எனும் தளத்தில் சென்று ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களுக்கு வாக்களிக்கலாம்