ஆசியன் விளையாட்டு போட்டிகளில் காலிறுதிக்கு நேரடியாக தகுதிபெற்ற இந்திய பெண்கள் அணி, இன்று மலேசிய பெண்கள் அணியை எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற மலேசியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா 5.4 ஓவர்களில் 60/1 என்ற நிலையில் முதல் இன்னிங்ஸிலும் மழையால் தாமதமானது. அந்த ஓவரில் ஸ்மிருதி மந்தனாவும் (27) ஆட்டமிழந்தார். இந்திய நேரப்படி காலை 8:15 மணிக்கு முதல் இன்னிங்ஸ் மீண்டும் தொடங்கியது. ஆட்டம் இரு அணிகளுக்கும் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.


 மறுமுனையில் தொடக்க வீரராக உள்ளே இருந்த ஷாபாலி வர்மா கிடைக்கும் பந்துகளை எல்லாம் சிக்ஸரும், பவுண்டரிகளாக அடித்து கொண்டிருந்தார். ஷஃபாலி வர்மா 39 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உதவியுடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 






தொடர்ந்து, இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (47*) மற்றும் ரிச்சா கோஷ் (7*) ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருக்க, இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. 15வது ஓவரில் ரிச்சா கோஷ் 4 பந்துகளில் 4, 6, 4,4 என விளாசியதில் இந்திய அணியின் ஸ்கோர் எகிறியது. 






மலேசிய பெண்கள் அணி தரப்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், மாஸ் எலிசா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். 


174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய மலேசியா 0.2 ஓவர்களில் 1/0 என்ற நிலையில் ரன்னை எட்டியபோது, மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து, மழை பெய்து வந்ததால் போட்டியானது கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 


மலேசிய அணியை விட இந்திய அணி பெண்கள் தரவரிசையில் முன்னிலையில் இருப்பதால், இந்திய பெண்கள் அணி நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. வருகின்ற 24ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய பெண்கள் அணி களமிறங்குகிறது. 


ஆசியன் விளையாட்டு போட்டிக்கான இந்திய பெண்கள் அணிக்கு ஹர்மன்பிரீத் தலைமையில் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டாது. இருப்பினும், வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது நடுவர்கள் மற்றும் வங்கதேச அணியினருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக, ஹர்மன்பீரித் கவுரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்தது. இதன் காரணமாக, ஹர்மன்பிரீத் இல்லாத நிலையில், ஸ்மிருதி மந்தனா இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார். வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் ஹர்மன்பீரித் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மலேசிய அணியை விட இந்திய அணி பெண்கள் தரவரிசையில் முன்னிலையில் இருப்பதால், இந்திய பெண்கள் அணி நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. வருகின்ற 24ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய பெண்கள் அணி களமிறங்குகிறது.