இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் டேவான இன்று ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. விராட்கோலி - கே.எல்.ராகுல் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மீண்டும் தொடங்கிய ஆட்டம்:
ஆசிய கோப்பைத் தொடர் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ரிசர்வ் டே போட்டி தாமதம் ஆனாலும் சற்று முன் தொடங்கியது. மழைக்கு பின் ஆட்டம் தொடங்கியதால் இரு நாட்டு ரசிகர்களும் மிகவும் ஆர்வத்துடன் போட்டியை பார்த்து வருகின்றனர்.
ஆட்டத்தை தொடங்கியுள்ள கே.எல்.ராகுல் – விராட்கோலி ஜோடி மிகவும் நிதானத்துடன் ஆட்டத்தை ஆடி வருகின்றனர். மழைக்கு பிறகு பந்துவீசுவதால் பாகிஸ்தான் வீரர்கள் மும்முரமாக வீசி வருகின்றனர். மைதானம் முற்றிலும் உலர்ந்தாலும் அவுட்ஃபீல்டில் ஒரு பகுதியில் புற்களே இல்லாத அளவிற்கு மைதானம் உள்ளது.
சிறப்பாக ஆடும் இந்தியா:
இந்திய அணிக்கு ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாக உள்ளதால் இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் சவாலான இலக்கை நிர்ணயித்தால் நிச்சயம் பாகிஸ்தான் அணி தடுமாறும்.
இந்த தொடர் தொடங்கியது முதல் இந்திய அணியின் ஆஸ்தான பவுலர் பும்ரா பந்துவீசவே இல்லை. நேபாள அணிக்கு எதிராக இந்திய அணியின் பவுலிங் மிகவும் மோசமாகவே இருந்த நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு எவ்வாறு அமையப்போகிறது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
கடந்த போட்டியில் போல இந்த போட்டியிலும் இந்திய அணி பவுலிங்கில் சொதப்பாமல் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும். பும்ரா. சிராஜ், தாக்கூர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோரும் சுழலில் அசத்த காத்துள்ளனர். இந்திய அணி 25 ஓவர்கள் ஆடி முடித்த பிறகு, அடுத்து பேட் செய்யும் பாகிஸ்தான் அணிக்கு மைதானம் சாதகமாக அமையுமா? பாதகமாக அமையுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
ராகுல் அரைசதம்:
இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் - விராட்கோலி ஜோடி சிறப்பாக ஆடி வருகிறது. அவுட்ஃபீல்டில் பந்து மிகவும் மெதுவாக செல்வதால் பவுண்டரிகள் செல்வதில் சிரமமாக உள்ளது. இந்திய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை விளாசியுள்ளனர். ஏற்கனவே ரோகித்சர்மா 49 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 56 ரன்களும், சுப்மன்கில் 52 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 58 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி இதே ரன்ரேட்டில் சென்றால் நிச்சயம் 300 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். உலகக்கோப்பை தொடரில் முக்கிய அங்கம் வகிக்கும் அவர் சிறப்பாக ஆடுவது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் 4வது இடம் என்பது ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடுவது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலமிகுந்த பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு எதிராக முதல் போட்டியில் தடுமாறிய இந்திய அணி, இந்த போட்டியில் சுதாரித்து பேட்டிங்கில் அசத்தலாக ஆடுவது இந்திய அணிக்கு உற்சாத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க: Watch Video: 'யாருமே செய்யாத ஒன்னு..' ஷாஹீன் அப்ரிடி முதல் ஓவரிலே சிக்ஸர்.. அரிய சாதனையை படைத்த ரோஹித் சர்மா..!
மேலும் படிக்க: Rohit Sharma: தொடக்க வீரராக 300வது சர்வதேச போட்டி.. ரெக்கார்டில் கெத்து காட்டும் ரோஹித் சர்மா..!