ஆசிய கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக கூறியது. பேட்டிங்கை ஏன் தேர்வு செய்தோம்? என்று வருத்தப்படும் அளவிற்கு  அவர்களது பேட்டிங் இருந்தது.


50 ரன்னில் சுருண்ட இலங்கை:


ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய பந்துவீச்சில் அனல் பறந்தது. பும்ரா வீசிய முதல் ஓவரிலே குசல் பெரரா டக் அவுட்டானார். பும்ராவிற்கு பிறகு பந்துவீசிய முகமது சிராஜ் ஒட்டுமொத்த இலங்கை அணியையும் கதிகலங்க வைத்தார். குறிப்பாக, அவர் வீசிய 4வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.





இதனால், வெறும் 15.2 ஓவர்களில் இலங்கை அணி 50 ரன்களுக்கு சுருண்டது. ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி வரலாற்றிலே குறைந்த ரன்னில் சுருண்ட அணி என்ற மோசமான சாதனையை இலங்கை இன்று படைத்துள்ளது, இதற்கு முன்பு இந்த மோசமான சாதனையை தன்வசம் வைத்திருந்த வங்கதேசத்திடம் இருந்து இந்த சாதனையை இலங்கை தன் வசமாக்கியுள்ளது. இது இலங்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆசிய கோப்பை ஒருநாள் வரலாற்றில் குறைந்த ரன்கள் எடுத்த அணிகள்:


50 ரன்கள் இலங்கை ( இந்தியாவிற்கு எதிராக)


87 ரன்கள் வங்கதேசம் ( பாகிஸ்தானுக்கு எதிராக)


94 ரன்கள் வங்கதேசம் ( பாகிஸ்தானுக்கு எதிராக)


96 ரன்கள் இலங்கை     ( இந்தியாவிற்கு எதிராக)


99 ரன்கள் வங்கதேசம்  ( இந்தியாவிற்கு எதிராக)


104 ரன்கள் நேபாளம்     ( பாகிஸ்தானுக்கு எதிராக)


105 ரன்கள் ஹாங்காங் (வங்கதேசத்திற்கு எதிராக)


111 ரன்கள் வங்கதேசம் ( பாகிஸ்தானுக்கு எதிராக)


115 ரன்கள் வங்கதேசம் (பாகிஸ்தானுக்கு எதிராக)


116 ரன்கள் இலங்கை     ( பாகிஸ்தானுக்கு எதிராக)


இலங்கையின் 2வது மோசமான ஸ்கோர்:


ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி வரலாற்றில் 100 ரன்களுக்குள் சுருண்ட அணி என்ற மோசமான சாதனையை இலங்கையும், வங்கதேசமுமே படைத்துள்ளது. வங்கதேசம் அணி 3 முறையும், இலங்கை அணி 2 முறையும் 100 ரன்களுக்குள் சுருண்டுள்ளது. ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் 169 ரன்கள் ஆகும்.




ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணியின் 2வது மோசமான குறைந்தபட்ச ஸ்கோராகவும் இந்த ரன் பதிவாகியுள்ளது. இலங்கை அணி இதற்கு முன்பாக 2012ம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, சங்ககரா, தில்ஷன் என ஜாம்பவன் ஆடிய இலங்கை அணி கடந்த சில ஆண்டுகளாகவே சில சிறப்பான வெற்றிகளை பெற்றாலும், இதுபோன்ற மோசமான ஆட்டத்தையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருவது அந்த நாட்டு ரசிகர்களை சோகம் அடைய வைத்துள்ளது.


இலங்கையின் குறைந்தபட்ச ஸ்கோர்:


43 ரன்கள் – தெ.ஆப்பிரிக்காவிற்கு எதிராக


50 ரன்கள் – இந்தியாவிற்கு எதிராக


55 ரன்கள் – வெ. இண்டீசுக்கு எதிராக


67 ரன்கள்  - இங்கிலாந்திற்கு எதிராக


73 ரன்கள்  - இங்கிலாந்திற்கு எதிராக


இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் 100 ரன்களுக்கு குறைவாக 14 முறை சுருண்டுள்ளது. அதில் 5 முறை இந்தியாவிற்கு எதிராக மட்டும் சுருண்டுள்ளது.


மேலும் படிக்க: IND vs SL Asia Cup 2023 Final LIVE: சம்பவம் செய்த சிராஜ்; 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை; கரை சேர்ப்பாளர்களா டைல்- எண்டர்ஸ்..?


மேலும் படிக்க: IND Vs SL Final, Innings Highlights: இலங்கையை கதறவிட்ட இந்தியா.. வெறும் 51 ரன்கள் எடுத்தால் ஆசிய கோப்பை நமக்குதான்..!