Asia Cup 2023, IND Vs SL: ஆசிய கோப்பைத் தொடட் கடந்த ஆக்ஸ்ட் மாதம் 30ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கியது. அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் களமிறங்கின. 


லீக் சுற்றின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறமுடியாமல் தொடரில் இருந்து வெளியேறின. இதனால், இந்தியா பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதவேண்டும். 


இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி ஏற்கனவே பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், போட்டி ரிசர்வ் டேவிற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் சேர்த்தது.  இதில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் அடுத்தடுத்து சதம் விளாசினர். குறிப்பாக விராட் கோலி 94 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசி 122 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதேபோல் கே.எல். ராகுல் 106 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசி 111ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 32 ஓவரில் 128 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 


பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த பிரமாண்டமான வெற்றியின் மூலம் இந்திய அணி தன்மீது வைக்கப்பட்டிருந்த விமர்சனங்களுக்கு அதிரடியாக பதில் அளித்துள்ளது. குறிப்பாக இந்திய அணியின் பந்து வீச்சு என்பது உலகக்கோப்பைத் தொடரில் எந்த அளவிற்கு எடுபடும் என்ற கேள்வி உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பந்து வீச்சு மிகவும் பிரமாதமாக இருந்ததால், பெரும்பாலான கிரிக்கெட் அணிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.  அதேபோல் இந்திய அணியின் பந்துவீச்சு இந்திய அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் இந்திய அணி இன்று அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராக களமிறங்குகிறது. இந்த போட்டி கொழும்பில் உள்ள பிரம்மதேசா மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 


இந்தியா பிளேயிங் லெவன்:


ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்


இலங்கை ப்ளேயிங் லெவன்: பாதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக(கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, மதீஷா பத்திரனா




Virat Kohli: ”கோலி பேர்ல எழுதுங்கோ”.. பாகிஸ்தானுக்கு எதிராக சதம், இந்தியாவின் மொத்த சாதனை பட்டியல் இதோ..!


IND vs PAK: குல்தீப் சுழல் மாயம்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா.. பாகிஸ்தான் 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி..!