Sri Lanka vs Pakistan: 'இன்றைய போட்டி மழையால் ரத்தானால்..' இறுதிப்போட்டிக்கு செல்வது பாகிஸ்தானா? இலங்கையா?

Asia Cup 2023 SL vs PAK: ஆசியகோப்பையில் இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் விளையாடப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை ஆடி வருகின்றன.

Continues below advertisement

இலங்கை, பாகிஸ்தானில் நடைபெற்று வந்த ஆசியக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது, சூப்பர் 4 தொடரில் பாகிஸ்தான், இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் விளையாடப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

நடக்குமா? நடக்காதா?

சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிளுடன் மோதிய போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்ததால் அவர்கள் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர். இதனால், இறுதிப்போட்டிக்கு செல்வது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் இன்று இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது.

ஆனால், கொழும்பு மைதானத்தில் மழை விட்டுவிட்டு பெய்து வருவதால் இன்று போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்றைய போட்டி ரத்தானால் இலங்கை அணிக்கே சாதகம் ஆகும். புள்ளிப்பட்டியலில் ஒரு வெற்றியுடன் பாகிஸ்தானுடன் சமநிலையில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் இலங்கை அணி பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது.

யாருக்கு சாதகம்? பாதகம்?

இதனால், இன்றைய போட்டி ரத்தானால் இலங்கை அணி ரன் ரேட் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இன்றைய போட்டி நடைபெற்று பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும். இந்த நிலையில், இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஆட்டம் டக்வொர்த் லிவீஸ் விதிக்கு செல்வதற்கு கூட இரண்டு அணிகளும் பேட் செய்திருக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும். இதனால், இந்த போட்டி நடக்காவிட்டால் மகிழ்ச்சி என்று இலங்கை ரசிகர்களும், போட்டி நடந்தே தீர வேண்டும் என்று பாகிஸ்தான் ரசிகர்களும் உள்ளனர். இந்த நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் இதே கொழும்பு மைதானத்தில் மோத உள்ளன.

புள்ளி நிலவரம்:

சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் டே வழங்கப்பட்டது. பாகிஸ்தான் அணிக்கும் முக்கியமான இந்த ஆட்டத்தில் ரிசர்வ் டே இல்லாதது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் இதுவரை விளையாடியதே இல்லை. அந்த வரலாறு இந்த முறை மாறுமா? அல்லது அதே நிலை தொடருமா? என்பது இன்றைய போட்டியின் முடிவைப் பொறுத்தே அமையும்.

தற்போதைய  புள்ளிப்பட்டியல் நிலவரப்படி, சூப்பர் 4 சுற்றில் இந்தியா 2 போட்டிகளில் ஆடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி 2 போட்டியில் 1 போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணியும் 2 போட்டியில் 1 போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால், ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணி -0.200 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் அணி -1.892 புள்ளிகளுடனும் இருப்பதால் இலங்கை 2வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் அணி 2 போட்டியிலும் தோற்றுவிட்டதால் இறுதிப்போட்டி வாய்ப்பை தவறவிட்டுள்ளது. 

மேலும் படிக்க: Asia Cup 2023 Final: ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியிலும் இருக்கு கனமழை.. கோப்பை யாருக்கு..? ரிசர்வ் டே இருக்கா..?

மேலும் படிக்க: SL vs PAK: இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்? இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று பலபரீட்சை

Continues below advertisement