வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


ஆசியக் கோப்பை 2023 இல் இதுவரை இலங்கையில் நடைபெற்ற ஆட்டங்கள் அனைத்திலும் மழை நிறைய இடையூறு செய்ததால் போட்டி முடிந்தும், முடியாமல் போனது. இந்தநிலையில், வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அப்படி மழை பெய்தால் ரிசர்வ் டே இருக்கா என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.


ஆசிய கோப்பை சூப்பர்-4 போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு, இறுதி போட்டியாளர் யார் என்பதை முடிவு செய்யும் போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்படும்.


மழை காரணமாக இந்திய அணி தொடர்ந்து 3 நாட்கள் விளையாடியது. இதில், முதலில் செப்டம்பர் 10-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போட்டி, மழை காரணமாக செப்டம்பர் 11-ம் தேதி ரிசர்வ் நாளில் முடிவடைந்தது. செப்டம்பர் 12 அன்று அதாவது நேற்று இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் மீண்டும் இலங்கைக்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறைவடைந்தது. அதில், இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 


செப்டம்பர் 14ஆம் தேதி பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையிலான முக்கியமான சூப்பர்-4 போட்டி நடைபெறும் நாளில் வானிலை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டிக்கு வானிலை மிகவும் மோசமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், டைட்டில் போட்டி ரிசர்வ் நாளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமானால், இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். இவ்வாறான நிலையில் மோசமான காலநிலை காரணமாக இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டால் அதன் பலன் இலங்கை அணிக்கே கிடைக்கும் ஏனெனில் சுப்பர்-4 புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை விட இலங்கை அணியின் நிகர ரன் ரேட் அதிகமாக இருக்கிறது இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் தலா 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்தப் போட்டிக்கு ரிசர்வ் நாள் கூட அறிவிக்கப்படவில்லை. தற்போது, ​​இலங்கையின் நிகர ஓட்ட விகிதம் -0.200 ஆகவும், பாகிஸ்தானின் நிகர ஓட்ட விகிதம் -1.892 ஆகவும் உள்ளது.


இறுதிப்போட்டியில் இந்திய அணி: 


இலங்கையை தோற்கடித்த இந்திய அணி 4-வது சுற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சிறந்த நெட் ரன் ரேட்டைக் கொண்டிருப்பதால், ஆசிய கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. எவ்வாறாயினும் இலங்கை அணி தோல்வியடைந்த போதிலும் இரண்டாவது இடத்தில் நீடிக்கின்றது.


வங்கதேச அணியில் நிலைமை என்ன..?


வங்கதேச அணி சுற்று-4 இல் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்துள்ளது. செப்டம்பர் 15-ம் தேதி இந்தியாவுடனான வங்கதேசத்துக்கு போட்டி மட்டுமே மீதமுள்ளது. வங்கதேச அணிக்கு இதற்குமேல் இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்பு இல்லை. இந்தியாவும் இந்த போட்டியை இறுதிப் போட்டிக்கு முன் பயிற்சி ஆட்டமாக எடுத்துக்கொண்டு ஜூனியர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.