Asia Cup 2023: முடிவுக்கு வந்த இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை; இதுதான் தீர்வாம்; முழு விபரம் உள்ளே..!

Asia Cup 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

Asia Cup 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

இந்திய கிரிக்கெட் வாரியம் அதாவது பிசிசிஐ-யும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதாவது பிசிபி-யும் ஆசிய கோப்பை போட்டியில் பங்கு பெறுவது தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே முரண்பட்டு வந்தன. அதில் இம்முறை போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தான் அணி வேறு நாடுகளில் போட்டியை நடத்த விரும்பவில்லை, அதேபோல், இந்திய அணி நிர்வாகமும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட விரும்பவில்லை. இந்த முரண்பாடு ஆரம்பத்தில் இருந்து இருந்ததால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இந்தியா பாகிஸ்தான் வந்து கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அப்ரிடி போன்ற வீரர்கள் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் கூட வைத்தனர். ஆனால் பிசிசிஐ நிர்வாகம தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.

இதனால், ஆசிய கிரிக்கெட் வாரியம் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிகளை பாகிஸ்தான் அல்லாத வெளி நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக,  ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், இலங்கை மற்றும் இங்கிலாந்து என இவற்றில் ஏதாவது ஒருநாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளாத கூறப்படுகிறது. 

இம்முறை நடக்கும் ஆசிய கோப்பை போட்டி 50 ஓவர் போட்டித் தொடர் என்பதால், வானிலையை கவனத்தில் கொண்டு எந்த நாடு என முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.  அதிலும் குறிப்பாக போட்டி நடப்பது செப்டம்பர் மாதம் என்பதால்  ஐக்கிய அரபு எமிரேட்ஸில்  சராசரி 40 டிகிரி அளவிலான வெப்பம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி ஏற்கனவே இதே மாதத்தில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இங்கிலாந்து தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இறுதித் தேர்வாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

ஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு அணியில் இடம்பெற்றுள்ளன.  இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்ற குழுவில் அங்கம் வகிக்கின்றன. இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 13 ஆட்டங்கள் 13 நாட்கள் நடைபெறும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 க்கு முன்னேறும். அதில் போட்டியிட்டு முதல் இடத்தினைப் பிடிக்கும்  இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று முறை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு முன்னதாக நடைபெற்ற விவாதங்களின் போது, பாகிஸ்தானுக்கு வெளியில் போட்டியை நடத்தினா நாங்கள் ஆசிய கோப்பை தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிடுவோம் என கூறியுள்ளனர். இலங்கை போட்டியை நடத்த முன்வந்தபோது, அதற்கும் பாகிஸ்தான் அணி நிர்வாகம் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானுக்கு வெளியில் இருந்து நடத்தப்படவுள்ளது. 

Continues below advertisement