World Boxing Championships: உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீது கங்காஸ், நிஹத் ஜரீன், சாவீட்டி பூரா, லவ்லினா போர்கோஹெய்ன் ஆகிய நான்கு வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
மகளிருக்கான 13-ஆவது உலக குத்துச்சண்டை போட்டிகள் புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் 74 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகள் லவ்லினா, நிகாத் ஜரீன், நீது கங்காஸ், மனீஷா உள்ளிட்ட 12 பேர் போட்டியில் பங்கேற்றனர்.
இறுதிப்போட்டிக்கு தகுதி:
இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் அரையிறுதிப் போட்டியில், 50 கிலோ எடைப்பிரிவில், நிஹத் ஜரீன் கொலம்பியாவின் இன்க்ரிட் வெலன்சியா (Ingrid Valencia)- வையை வீழ்த்தினார். நீது கங்காஸ் கஜகஸ்தான் வீராங்கனை Alua Balkibekova-வை தோற்கடித்தார்.
இவரை தொடர்ந்து, 3 முறை ஆசியப் பதக்கம் வென்ற சாவீட்டி பூரா, 81 கிலோ எடைப்பிரிவில் ஆஸ்திரேலியாவின் எம்மா க்ரினீட்டியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். லவ்லினா சீனாவின் லீ குவான் என்பவரை வீழ்த்தினார்.
லவ்லினா போர்கோஹைன்,நிது கங்காஸ், நிகாத் ஜரீன் மற்றும் சவீதி பூரா உள்ளிட்ட 4 இந்திய வீரங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் வாசிக்க..
Virat Anushka: விருது விழாவில் அசத்தல் லுக்... க்யூட்டாக வந்து சிக்ஸர் அடித்த விராட் - அனுஷ்கா ஜோடி!