ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளது. அதே சமயம் இந்த டைட்டில் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும். ஆனால் இந்த இறுதிப் போட்டியை மழை பாதிக்குமா? இன்று கொழும்பில் வானிலை எப்படி இருக்கும்? இந்தியா-இலங்கை இறுதிப் போட்டி மழையால் கைவிடப்படுமா?


ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியானது இந்தியா மற்றும் இலங்கை இடையே இன்று கொழும்பு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியின் போது 80% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


இன்றைய போட்டியின்போது மழை பெய்தால், நாளை ரிசர்வ் நாளில் விளையாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் நாளிலும் நாளை மழை பெய்து போட்டி தடைப்பட்டால், 2023 ஆசிய கோப்பையின் வெற்றியாளராக இரு அணிகளும் அறிவிக்கப்படும். 


சூப்பர் 4 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், கடைசி சூப்பர் 4 சுற்று போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக தோல்வியை சந்தித்தது இந்திய அணி. அதேநேரத்தில், சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியாவிற்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி தோல்வியை கண்டது குறிப்பிடத்தக்கது. 


இப்போது மீண்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் களம் இறங்குகின்றன. இறுதிப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால், அது ரிசர்வ் நாளில் நடைபெறும். ரிசர்வ் நாளில் கூட மழை பெய்தால், இந்தியா-இலங்கை கூட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.


ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளாக செப்டம்பர் 18 (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியின் போது பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 2002 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட, இந்தியாவும் இலங்கையும் கூட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர். 


இன்று கொழும்பில் வானிலை எப்படி இருக்கும்?


கொழும்பில் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தவிர இடியுடன் கூடிய மழை பெய்யும். இன்று அங்கு பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 90 வீதமாக உள்ளது. மேலும், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு 54 சதவீதம் உள்ளது. 


கொழும்பில் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணி, மாலை 6 மணி, இரவு 8 மணி மற்றும் 10 மணிக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரம், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி திட்டமிட்ட நேரத்தில் இருந்து தாமதமாக தொடங்கலாம் என நம்பப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டைட்டில் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என நம்பப்படுகிறது. முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் சூப்பர்-4 சுற்று போட்டிக்கு ரிசர்வ் டே வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, இந்த இறுதிப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கணிக்கப்பட்ட இந்திய அணி


ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரத் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.


கணிக்கப்பட்ட இலங்கை அணி


பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய் டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), துனித் வெல்லஸ், சஹான் ஆராச்சிகே, பிரமோத் மதுஷான் மற்றும் மதீஷ பத்திரன.