ஆசிய கோப்பைத் தொடர் இந்தியா – இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிறகு, சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித்சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.


இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். தொடக்க வீரர் லிட்டன் தாஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகினார். அடுத்த ஓவரிலே தன்சித் ஹாசன் 13 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு அனமுல் ஹக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணிக்காக கேப்டன் ஷகிப் அல் ஹசன் தனி ஆளாக போராடத் தொடங்கினார்.




அவருக்கு மெகிதி ஹாசன் சில நிமிடங்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த தருணத்தில் மெகிதி ஹாசன் அக்ஷர் படேல் சுழலில் வீழ்ந்தார். பின்னர், ஷகிப் அல் ஹசன் – தௌகித் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். களத்தில் நன்றாக தங்களை நிலைநிறுத்திய பிறகு ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசியும், அவ்வப்போது சிக்ஸர்களை பறக்கவிட்டும் ரன்ரேட்டை உயர்த்தினர்.


வேகம், சுழல் என இவர்களை இந்திய கேப்டன் பயன்படுத்தி பார்த்தும் இவர்கள் சிறப்பாக ஆடினர். இதனால்,100 ரன்களை கடக்குமா? என்று இருந்த வங்கதேச அணி 150 ரன்களை கடந்தது. 6வது விக்கெட்டிற்கு ஷகிப் – மெகிதி ஹாசன் இருவரும் இணைந்து 100 ரன்களை எடுத்தனர். பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்த பிறகு இந்த பார்ட்னர்ஷிப்பை தாக்கூர் பிரித்தார். சிறப்பாக ஆடி வந்த ஷகிப் அல் ஹசன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அவர் போல்டானார்.


மிகவும் நெருக்கடியான நேரத்தில் களமிறங்கிய ஷகிப் அல் ஹசன் 85 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 80 ரன்களை எடுத்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஷமிம் ஹொசைன் 1 ரன்னில் அவுட்டானார். ஆனாலும், தௌகித் – நசும் அகமது ஜோடி சிறப்பாக ஆடியது. நன்றாக ஆடி வந்த தௌகித் அரைசதம் விளாசினார். அவர் 81 பந்துகளில்  5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 54 ரன்கள் விளாசியபோது ஷமி பந்தில் அவுட்டானார்.




தொடக்கத்தில் நிதானமாக ஆடிய நசும் கடைசி கட்டத்தில் நசும் அதிரடியாக ஆடினார்.  இதனால், வங்கதேசத்தின் ஸ்கோர் எகிறியது. சிறப்பாக ஆடிய நசும், அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்த்த நேரத்தில்  44 ரன்களில் போல்டானார். ஆனாலும், வங்கதேச அணி 250 ரன்களை கடந்தது, 50 ஓவர்களின் முடிவில் வங்கதேச அணி ரன்களை எடுத்தது


.இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷமி 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா, அக்ஷர் படேல், ஜடேஜா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.