இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளன. ஹாங்காங் அணி தகுதிச் சுற்றில் யுஏஇ அணியை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இந்தியா,பாகிஸ்தான் ஹாங்காங் அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. முதலில் குரூப் சுற்றுப் போட்டிகள் நடைபெறுகிறன.


இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை-ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து இந்திய அணி 31ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது. அதன்பின்னர் இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். 


 






ஆசிய கோப்பை முழு அட்டவணை:


ஆகஸ்ட் 27: இலங்கை-ஆஃப்கானிஸ்தான்


ஆகஸ்ட் 28: இந்தியா-பாகிஸ்தான்


ஆகஸ்ட் 30: பங்களாதேஷ்-ஆஃப்கானிஸ்தான்


ஆகஸ்ட் 31: இந்தியா-ஹாங்காங்


செப்டம்பர் 1: இலங்கை-பங்களாதேஷ்


செப்டம்பர் 2: பாகிஸ்தான் -ஹாங்காங்


செப்டம்பர் 3: பி1-பி2


செப்டம்பர் 4: ஏ1-ஏ2


செப்டம்பர் 6: ஏ1-பி 1


செப்டம்பர் 7: ஏ2-பி2


செப்டம்பர் 8: ஏ1-பி2


 செப்டம்பர் 9: பி1-ஏ2


செப்டம்பர் 11: இறுதிப் போட்டி சூப்பர் 4 முதலிடம்- இரண்டாம் இடம் பிடித்த அணிகள்


அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். 


நேரலை:


இந்தப் போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செனலில் நேரலையாக வரும். அதேபோல் இணையத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் ஆசிய கோப்பை போட்டிகள் நேரலையாக வரும். 


ஆசிய கோப்பை தொடரில் நடப்புச் சாம்பியனாக இந்திய அணி உள்ளது. இந்த முறை ஆசிய கோப்பை தொடர் டி20 முறையில் நடைபெறுகிறது. இந்தாண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் ஆசிய கோப்பை அதற்கு முன்பாக நல்ல பயிற்சியாக அமையும் என்று கருதப்படுகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று ஆசிய சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




மேலும் படிக்க: பாபர் அசாமைவிட ரோகித் சர்மா இதில் வல்லவர்.. போட்டு உடைத்த முன்னாள் பாக். கேப்டன்..